இந்த படத்தில் நடிகர் ரஜினிகாந்த் பகலில் கல்லூரி பேராசிரியராகவும் இரவில் ஹாஸ்டல் வார்டனாகவும் பணியாற்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இந்த கல்லூரி இருக்கும் பகுதியில் சமூக விரோதிகள் செய்யும் அட்டகாசங்களையும் அவர்களையும் இரவு வேலைகளில் எதிர்த்து அவர்களை அடக்குகிறார் என்பது தான் கதையாம். சமீபத்தில் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி இருந்தது. அதன் பின்னர் படத்தை பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் வெளிவராத நிலையில், சமீபத்தில் இசை வெளியீடு பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டனர் சன் பிக்சர்ஸ் நிறுவனம். முதல் சிங்கிள் பாடல் டிசம்பர் 3 மற்றும் இரண்டாவது பாடல் 7 அன்று வெளியாகுமாம். அணைத்து பாடல்களும் டிசம்பர் 9 ரிலீஸ் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர்.#PettaAudiofromDec9th
— Sun Pictures (@sunpictures) November 23, 2018
The first single will be released on 3rd and second single on 7th!@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @Nawazuddin_S @SasikumarDir @trishtrashers pic.twitter.com/DzI1V2K58Z
இந்நிலையில் நேற்றய போஸ்டரில் ரிலீஸ் பற்றிய எந்த தகவலும் இல்லை. இதனால் இணையத்தில் சிலர் அப்போ படம் ஏப்ரல் 14 தள்ளிபோகிறதோ என்று கேட்க ஆரம்பித்தனர்.பின்னர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் 2019 பேட்ட பொங்கல் என்பதை சேர்க்க மறந்துவிட்டோம் என்று தெரிவித்திருந்தார்.Forgot to add #PettaPongal2019 !! https://t.co/z8YcfLDh5E
— karthik subbaraj (@karthiksubbaraj) November 23, 2018





