பேட்ட படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இது தான்..!சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல்..!

0
302
vijaysethupathi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வெளியான 2.0 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு வசூல் ரீதியாக பல சாதனைகளை செய்துள்ளது. இந்த படத்தை தொடரந்து தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ படத்தில் நடித்து வருகிறார் ரஜினி.

இந்த படத்தின் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். மேலும், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, த்ரிஷா போன்றவர்கள் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்தில் இருந்து ‘மரண மாஸ்’ என்ற பாடல் நேற்று (டிசம்பர் 3) வெளியானது.

அனிருத்தின் இசையில் வெளியான இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதோடு 1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையார்களால் பார்க்கப்பட்டது. இந்த பாடலை தொடர்ந்து இன்று (டிசம்பர் 4) மாலை 6 மணிக்கு இந்த படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் போஸ்ட்டரை வெளியிடவுள்ளதாக அறிவித்திருந்தது சன் பிக்சர்ஸ்.

இந்நிலையில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் புகைப்படத்தை தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜித்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.