பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் நவாசுதீன் சித்திக். பாலிவுட்டில் பிரபல நடிகரான இவர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘பேட்ட ‘ படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் நவாசுதீனின் மனைவி விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ள சம்பவம் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து மற்றும் ஜீவனாம்சம் எதிர்பார்க்கும் அவரது மனைவி சார்பாக நடிகர் நவாசுதீன் சித்திகிக்கு சட்ட அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாக ஆலியா சித்திகியின் வழக்கறிஞர் அபய் சஹாய் தெரிவித்துள்ளார். விவாகரத்துக்கான காரணத்தை கூறிய நவாசுதீன் மனைவி ‘இப்போது நான் பொது களத்தில் கொண்டு வர விரும்பாத நிறைய விஷயங்கள் உள்ளன, ஆனால் ஒரு பல வருடங்களுக்கு முன்னர் நாங்கள் திருமணம் செய்துகொண்டவுடன் எங்கள் பிரச்சினைகள் தொடங்கின. இரண்டு மாத லாக் டவுனில் நான் சிந்திக்க நிறைய நேரம் கொடுத்தது.
ஒரு திருமணத்தில் சுய மரியாதை மிகவும் முக்கியமானது. என்னிடம் அது இல்லை. நான் யாரும் இல்லாதது போல் உணர்ந்தேன். நான் எப்போதும் தனியாக உணர்ந்தேன். அவரது சகோதரர் ஷாமாஸும் ஒரு பிரச்சினையாக இருந்தார். நான் எனது அசல் பெயரான அஞ்சலி கிஷோர் பாண்டேவுக்குச் சென்றுவிட்டேன். எனது நலனுக்காக அடுத்தவரின் அடையாளத்தைப் பயன்படுத்துகிறேன் என்பதை நினைவூட்ட விரும்பவில்லை.
நான் என் போக்குக்கு செல்ல விரும்புகிறேன். எதிர்காலத்தைப் பற்றி நான் அதிகம் யோசிக்கவில்லை, ஆனால் இந்த திருமணத்தை இனி நான் விரும்பவில்லை. இதை பற்றி மீண்டும் யோசிக்க வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார். நவாஸுதீன்,ஆலியா தம்பதியருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் ‘என் பிள்ளைகளை நான் தான் வளத்தேன், எனவே, அவர்கள் என்னுடைய பாதுகாப்பில் இருக்க வேண்டு என்று நினைக்கிறன்’ என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் தான் நவாஸுதீனின் தங்கை ஷியாமா புற்று நோயால் காலமானார். ஷியாமாவுக்கு 18 வயதாக இருக்கும் போது மார்பக புற்றுநோய் ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 8 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். நடிகர் நவாசுதீன் சித்திக்கின் தங்கை ஷியாமா சித்திக் பல நாட்களாகவே புற்றுநோயால் அதிக அவஸ்தைக்குஉள்ளாகி உள்ளார். மேலும், ஷியாமா உடல் நிலை மிக மோசமான நிலைக்கு போனது. அதோடு இவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த டிசம்பர் மாதம் இறந்து விட்டார்.