நயன்தாராவின் பெயருக்கு பின்னால் இருப்பது பிரபாகரன் தான் தெரியுமா? விவரம் உள்ளே !

0
2267
nayanthara - pharabagran
- Advertisement -

நயன்தாராவின் பெயருக்குப் பின்னால் பிரபாகரன் இருப்பது தெரியுமா?

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் தனி ஹீரோயினாக நடித்து படத்தை பிரம்மாண்டமாக வெற்றி பெற வைக்க முடியும் என்பதை அடுத்தடுத்த படங்களில் காட்டி வருகிறார் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. ஹீரோயின் என்றாலே காதல், டுயட், ஹீரோவை திருத்தும் கேரக்டர் போய் தற்போது தனித்து நடித்து முத்திரை பதிக்க முடியும் என்பதயும் காட்டியிருக்கிறார் நயன்.
nayanthara அவர் தனியாக ஒரு படம் முழுவதும் கலக்கியிருக்கும் படம் ‘அறம்’. இந்த படத்தை கோபி நயினார் இயக்கியுள்ளார். படத்தில் தைரியமிக்க நேர்மையான ஒரு மாவட்ட கலெக்டராக வருவார் நயன்தாரா. இப்படத்தில் நயன்தாராவின் பெயர் ‘மதிவதினி’. இந்த பெயர் வரலாற்றில் எங்கோ கேட்க்கப்பட்டது போல் உள்ளதல்லவா?

- Advertisement -

ஆம், வரலாற்றில் இடம் பெற்ற பெயர் தான் இது. ஈழத்தில் விடுதலை கோரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் மனைவி பெயர் தான் இந்த மதிவதினி என்பது. அதே போல் படத்தில் குழந்தையைக் காப்பாற்றும் அந்த பையனின் பெயரும் கூட முத்து என வைத்திருப்பார்.

இதையும் படிங்க: வாட்ச்மேன் வேலைக்குக்கூட போவேன் ! ஆனால் இதை மட்டும் செய்யவே மாட்டேன் – அறம் இயக்குனர்!

-விளம்பரம்-

ஈழ விடுதலையில் பெரிதும் நாட்டம் கொண்டவர் இயக்குனர் கோபி நயினார். இதனால் தான், கலெக்டரான நயன்தாரவிற்கு மதிவதினி எனவும், ஈழத்தில் உச்சகட்டப் போரின் போது உயிர் நீத்த முத்துக்குமாரின் பெயரை அந்த காப்பாற்றும் பையனுக்கும் வைத்ததாக கூறியிருக்கிறார் இயக்குனர் கோபி.

Advertisement