என்னது விஜய் 62-ல் நான் நடிக்கிறேனா .? அதிர்ச்சி அடைந்த பிரபல நடிகை !

0
15596

தளபதி விஜயின் 62வது படம் முருகதாஸ் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது கொல்கத்தாவில் சூட்டிங் முடிந்து சென்னையில் ஒரு சில காட்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

piaa-bajpai

இந்த படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை. ஆனால் கலப்பை, அல்லு, உழவன் என ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சில பிரபலமான தலைப்புகளும் உலா வருகின்றன. படத்திற்கு ஆஸ்கர் புயல் ஏ.ஆர் ரஹ்மான் இயக்குகிறார்.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் நடிகை பியா பாஜ்பாய் நடிக்கிறார் என இந்தியா டுடே பத்திரிக்கை செய்தியை வெளியிட்டது.இதற்கு உடனடியாக பதில் அளித்த பியா பாஜ்பாய், அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை, நான் இந்த படத்தில் நடிக்கவில்லை, என பதிலளித்துள்ளார்.