ப்பா, பிச்சைக்காரன் படத்தில் வந்த நடிகரா இது – உண்மையில் இந்த ஆசையோடு தான் சினிமாவுக்கே வந்தாராம்.

0
1358
pichaikaran
- Advertisement -

இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் பிச்சைக்காரன். இந்த படத்தில் விஜய் ஆன்டனி, சட்னா தித்டசு, பகவதி பெருமாள், முத்துராமன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றிருந்தது. தாயின் உயிரை காப்பாற்ற பிச்சையெடுத்து போராடும் மகன். அப்போது பிச்சை எடுக்க நேரிடும் போது ஏற்படும் பிரச்சனைகளை மையமாகக் கொண்ட கதை தான் பிச்சைக்காரன். மேலும், தன் அம்மாவை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்று 48 நாட்கள் விஜய் ஆண்டனி பிச்சைக்காரனாக பிச்சைக்காரர்கள் உடன் சென்று பிச்சை எடுத்து வருவார்.

-விளம்பரம்-

அப்போது பிச்சை எடுக்கும் நபர்களில் சில பேர் இவருக்கு நண்பர்கள் ஆவார்கள். அந்த வகையில் அவர்களில் வயதான தோற்றத்தில் இருந்த பிச்சைக்காரர் ஒருவர் தான் நடிகர் கோவிந்த மூர்த்தி. இதற்கு முன் இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் பிச்சைக்காரன் படத்தின் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அதிலும் இந்த படத்தில் இவர் ரேடியோ மூலம் பேசிய வசனம் வேற லெவல். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் இயக்குனரும் ஆவார். இவர் பப்பாளி என்ற படத்தை இயக்கியிருந்தார். அதோடு இவர் சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் 2 என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, எனக்கு சினிமாவில் நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் படம் இயக்குவது தான் என்னுடைய குறிக்கோள். தற்போது நான் அடுத்த படம் இயக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறேன். அதற்கான வேலைகள் நடந்து வருகின்றன. நடிப்பு, இயக்கம் என என்னுடைய வாழ்க்கை சென்று கொண்டிருக்கிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இவருடைய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் கோவிந்த மூர்த்தி அவர்கள் அப்படியே ஹாலிவுட் ஹீரோ போல் வேற லெவலில் உள்ளார். இதை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் விஜய் ஆண்டனி உடன் பிச்சைக்காரனாக நடித்த நடிகரா! இவர் இந்த ரேஞ்சில் இருக்கிறாரே! என்று கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். மேலும், இவருடைய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும் லைக் செய்தும் வருகிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement