அமெரிக்கா சென்று பிஸ்னஸ் வுமனாக மாறி, தற்போது வேற லெவலில் இருக்கும் பிச்சைக்காரன் பட அம்மா நடிகை.

0
1347
deepa
- Advertisement -

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சினிமா உலகில் நுழைந்து தற்போது முன்னணி நடிகராக கலக்கி கொண்டு இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தான் அறிமுகமானார். தற்போது நடிகராக பட்டைய கிளப்பி கொண்டு வருகிறார். 2005 ஆம் ஆண்டு வெளியான சுக்ரன் படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், விஜய் ஆண்டனி படங்களுக்கு ஒரு இசையமைப்பாளராக மட்டும் தனது திரைப் பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்து ஹீரோவாக நடிக்கலாம் என்று முடிவெடுத்தார்.

-விளம்பரம்-

பின் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த நான் படத்தின் மூலம் ஹீரோவாக தன் திரை பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து இவர் சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், அண்ணாதுரை, காளி, திமிரு புடிச்சவன் என பல படங்களில் நடித்தார். விஜய் ஆண்டனி படத்துக்கு என்று மக்கள் மத்தியில் ஒரு தனி இடம் உள்ளது. அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று பிச்சைக்காரன். இந்த படத்தை சசி உதவி இயக்குனர் தயாபரண் இயக்கி இருக்கிறார்.

- Advertisement -

பிச்சைக்காரன் படம்:

அதோடு 2016 ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்கொடுத்த படம். பணக்காரன் ஆக இருந்த விஜய் ஆண்டனி தன்னுடைய அம்மாவிற்காக பிச்சை எடுத்து தன் தாயின் உயிரை காப்பாற்றுவார். இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. அதுமட்டுமில்லாமல் இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் கேட்டு இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தில் விஜய் ஆண்டனிக்கு அம்மாவாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை தீபா.

பிச்சைக்காரன் பட நடிகை தீபா:

இவர் ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக இருந்தவர். இவர் அருணாச்சலம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் ஹீரோயினியாக இருந்த தீபா சினிமாவில் வாய்ப்பு குறைந்த உடன் அம்மா, அத்தை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பிறகு இடையில் இவர் சினிமாவே வேண்டாம் என்று வெளிநாடு சென்று விட்டார். அதற்குப் பிறகுதான் இவர் மீண்டும் சினிமாவில் நடித்தார்.

-விளம்பரம்-

சினிமாவில் விலகிய காரணம்:

அதிலும் பிச்சைக்காரன் படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் படு பேமஸ் ஆனார். மேலும், நடிகை தீபா திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் ஒரு தொழிலதிபரும் ஆவார். இந்த நிலையில் நடிகை தீபா குறித்த ஒரு ஸ்பெஷலான தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், 2020 ஆம் ஆண்டு முதல் நடிகை தீபாவும் தொழிலதிபராக திகழ்கிறார். லோட்டஸ்லைன் என்ற பெயரில் இவர் கம்பெனி ஒன்றை நடத்தி வந்தார். ஆரம்பத்தில் சினிமாவில் அதிக ஆர்வம் காட்டி வந்த தீபா நடிப்பதை விட்டு திருமணம் செய்து கொண்டு தன்னுடைய கணவர் உடன் சேர்ந்து குடும்பத்தையும் தொழிலையும் பார்த்து வருகிறார்.

நடிகை தீபாவின் லேட்டஸ்ட் புகைப்படம்:

அதிலும் தற்போது இவர் நடிப்பதில் இருந்து விலகி முழு கவனமும் தொழில் காண்பித்து வருகிறார். இதுகுறித்து அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது, இனி எந்த படத்திலும் நடிப்பதில்லை. பட வாய்ப்புகள் வந்தால் அதைப் பற்றி யோசிக்கலாம் என்று கிண்டலாக சிரித்து கூறி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதில் பார்ப்பதற்கு செம்ம மாடர்னாக நடிகை தீபா இருக்கிறார். இதை பார்த்த பலரும், இவர்தான் பிச்சைக்காரன் அம்மாவா! என்று வியந்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

Advertisement