இந்தியில் ரீமேக் ஆகப்போகும் ‘பிதாமகன்’ அதுவும் இந்த மாஸ் ஹீரோ நடிப்பில்.! இயக்குனர் யார் தெரியுமா.!

0
733
pithamagan

தமிழில் 2003 ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த பிதாமகன் படம் மாபெரும் வெற்றியடைந்து இத்திரைப்படத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா முதலிய பலர் நடித்திருந்தனர். இந்த படம் நடிகர் விக்ரமிற்கு ஒரு நல்ல திருப்பு முனை படமாக அமைந்த்து.

இந்த படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தை இந்தியில் ரீ-மேக் செய்ய திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நடிகரும் இயக்குனருமான சதிஷ் கௌசிக் வாங்கியிருந்தார். இவர் ஹிந்தியில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

- Advertisement -

ஏற்கனவே பாலா இயக்கிய ‘சேது ‘ படத்தை ‘தேரா நாம்’ என்ற பெயரில் ரீ மேக் செய்திருந்தார். இந்த படத்தில் சல்மான் கான் மற்றும் பூமிகா நடித்திருந்தனர். தற்போது மீண்டும் சல்மான் கானை வைத்து பிதாமகன் ரீ-மேக்கை எடுக்க திட்டமிட்டு வருகிறாராம்.

இதுகுறித்து பேசிய அவர், தற்போது நான் மற்ற படங்களில் பிசியாக இருந்து வருகிறேன் ஆதனால், பிதாமகன் ரீ-மேக்கை வேறு எதாவது இயக்குனரை வைத்து எடுக்க திட்டமிட்டுளேன் என்று கூறியுள்ளார். இந்த படத்தை பாலா இயங்கினாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

-விளம்பரம்-
Advertisement