ரஜினி கையில் இருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா ? மீனானு தான் நினைசீங்க ? அதான் இல்ல.

0
822
anuradha
- Advertisement -

சமீப காலமாகவே சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள், வீடியோக்கள் என்று சோசியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடைய பழைய புகைப்படங்கள், வீடியோக்கள் அதிகமாக வருகிறது. அந்த வகையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு சிறு வயது குழந்தையை தூக்கி வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவில் அன்றும் இன்றும் என்றும் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 80 காலகட்டம் தொடங்கி தற்போது வரை இவர் எண்ணற்ற படங்களில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றிருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தாலும் வசூலில் கோடிகளை குவித்து இருக்கிறது. இந்த படத்தில் குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள்.

- Advertisement -

ரஜினிகாந்த் உடைய பழைய வீடியோக்கள்,புகைப்படங்கள்:

இந்த படத்தை தொடர்ந்து ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த தகவல்களை ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சமீப காலமாகவே ரஜினிகாந்த் உடைய பழைய வீடியோக்கள், புகைப்படங்கள் என ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது ரஜினிகாந்த் ஒரு சிறுமியை கையில் தூக்கி வைத்திருக்கும் புகைப்படத்தை கொண்டாடி வருகிறார்கள். ரஜினிகாந்த் கையில் தூக்கி வைத்திருக்கும் சிறுமி என்றால் அனைவருக்கும் ஞாபகம் வருவது மீனா தான்.

வைரலாகும் ரஜினிகாந்த் உடைய புகைப்படம்:

அந்தளவிற்கு ரஜினிகாந்த்- மீனா காம்போ ரசிகர்கள் மத்தியில் பிரபலம். ஆனால், அவர் மீனா கிடையாது. ரஜினிகாந்த் ஆரம்பத்தில் நடித்த படங்களில் பல குழந்தை நட்சத்திரங்கள் இவருடன் நடித்திருந்தார்கள். இவரது படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பல்வேறு பிரபலங்கள் தற்போது நாயகிகளாகவும் நடிகர்களாக வாழ்ந்து வருகிறார்கள். அந்த வகையில் புகைப்படத்தில் இருக்கும் இந்த சிறுமி கூட ஒரு மிகப்பெரிய பிரபலம் தான். இந்த சிறுமி வேற யாரும் இல்லைங்க, பிரபல பின்னணி பாடகியான அனுராதா ஸ்ரீராம். இவர் தமிழகத்தை சேர்ந்த இந்திய திரைப்பட பின்னணிப் பாடகி மற்றும் கர்நாடக இசைக் கலைஞர் ஆவார்.

-விளம்பரம்-

பாடகி அனுராதா திரை பயணம்:

தன்னுடைய 6 வயதிலேயே அவரது இசைப் பயிற்சியை தொடங்கியவர். பின் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் அனுராதா பங்கு பெற்றிருந்தார். மேலும், ஏ. ஆர். ரகுமான் தான். பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு என்ற பாடலை குரூப் பாடகராக பாடி சினிமாவிற்கு அறிமுகமானார் அனுராதா. அதன் பின்னர் இவர் மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் இவர் பல படங்களில் பின்னணி பாடல்களை பாடி இருக்கிறார்.

ரஜினியுடன் இருக்கும் சிறுவயது அனுராதா புகைப்படம்:

அது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் அனுராதா. தற்போது இவர் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். அனுராதா திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இவர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார். அனைத்து மொழிகளிலும் சேர்த்து இவர் சுமார் 4000 பாடல்கள் பாடியுள்ளார். இந்நிலையில் இவர் சிறுமியாக இருந்தபோது ரஜினியுடன் காளி என்ற படத்தில் நடித்துள்ளார். அந்தப் படம் புகைப்படம் தான் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement