பிரபல பாடகி உஷா உதுப்பின் கணவர் திடீர் மரணம், பிரபலங்கள் இரங்கல் – காரணம் இதுதானாம்

0
454
- Advertisement -

பிரபல பெப்பிசைப் பாடகி உஷா உதுபின் கணவர் மறைந்த செய்தி தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. உஷா உதூப்பின் தந்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த சாமி ஐயர். இவர் மும்பையில் போலீசாக பணியாற்றியவர். உஷா பிறந்தது சென்னையில் என்றாலும் படித்து வளர்ந்தது எல்லாமே மும்பையில் தான். இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சங்கீத வகுப்பில் இவரது கனத்த குரலால், குரல் சரியில்லை என்று ஆசிரியையால் வெளியேற்றப்பட்டார்.

-விளம்பரம்-

ஆனால் அதே ஆசிரியை பிற்காலத்தில் இவரதது பாடல்களை கேட்டு கைதட்டும் நிலையும் உருவானது. முதலில் சென்னையில் தான் உஷாவிற்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. ‘9 ஜேம்ஸ்’ என்ற நைட் கிளப்பில் படுவதற்காக இவரை அழைத்துச் சென்றார்கள். அங்கு ஒரு ஆங்கில பாடலைப் பாடி அசத்தினார். பின் அதே கிளப்பில் 1500 ரூபாய் சம்பளத்தில் பாடகியாக பணியாற்றினார் . இவர் கிளப்பில் பாடுகியானார் என்பதை விட நைட் கிளப் ராணி ஆனார் என்பதே சரி.

- Advertisement -

இசைப் பயணம்:

இதுபோல் தொடங்கிய இசை பயணத்தில், இவரது பாடல்களுக்கு வரவேற்புகள் பெருகவே டெல்லி நைட் கிளப்பில் பாடத் தொடங்கினார். அங்குதான் உஷாவை ஹிந்தி சினிமாவின் உச்ச நட்சத்திரம் ஆக இருந்த தேவ் ஆனந்த் சந்தித்தார் ‌. அவரின் திறமையை பார்த்து தான் இயக்கிய ‘ஹரே ராமா ஹரே கிருஷ்ணா’ படத்தில் 1971 ஆம் ஆண்டு உஷாவை பாட வைத்தார். அதன் மூலம் தான் உஷா பாலிவுட்டின் பின்னணி பாடகியாக அறிமுகமானார்.

சூப்பர் சிங்கர் நடுவர்:

மேலும் இவர் இந்தி மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா போன்ற பழமொழிகளில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடி அசத்தியுள்ளார். தமிழில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் மேல்நாட்டு மருமகள், இதயக்கனி, ஊருக்காக உழைப்பவன் போன்ற படங்களில் பாடல்களை பாடி உள்ளார் உஷா. பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரபல பொழுதுபோக்கு நிகழ்ச்சி ‘சூப்பர் சிங்கர் சீசன் 1’ மற்றும் ‘சூப்பர் சிங்கர் சீசன் 2 ‘போட்டிகளில் நடுவராக பங்கேற்றார். அதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் உஷா.

-விளம்பரம்-

உஷா உதுப் கணவர் :

தற்போது 76 வயதாகும் உஷாவுக்கு சமீபத்தில் தான் இந்திய அரசால் ‘பத்மபூஷன் விருது’ வழங்கப்பட்டது. இந்நிலையில் பிரபல பின்னணி பாடகி உஷா உதுப்பின் இரண்டாவது கணவர் ஜானி சாக்கோ உதூப், வயது 78 நேற்று கொல்கத்தாவில் காலமானார். உஷாவின் கணவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலியால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் மாரடைப்பால் உயிர் இழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இறுதி சடங்கு :

உஷா உதுப் மற்றும் ஜானி சாக்கோ உதுப் இருவருக்கும் சன்னி என்ற ஒரு மகனும், அஞ்சலி என்ற மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல பாடகியின் கணவர் திடீரென உயிரிழந்த சம்பவத்தால் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உஷா உதூப் கணவரின் இறுதிச்சடங்கு இன்று நடைபெறும் என்று கூறப்படுகிறது

Advertisement