பா ம க போட்டியிட விரும்பும் 23 தொகுதிகளின் பட்டியலை அ தி முகவிடம் வழங்கியது. இதோ விவரம்.

0
1277
- Advertisement -

பா ம க போட்டியிட விரும்பும் 23 தொகுதிகளின் பட்டியலை அ தி முகவிடம் வழங்கியது. தமிழகத்தில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து, தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற பல்வேறு கட்சிகளும் மும்மரம் காட்டி வரும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தைகளும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே ஆளும் கட்சியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், டாக்டர் அன்பு மணி ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணியை அறிவித்து இருந்தது.

-விளம்பரம்-

இதை தொடர்ந்து வரும் தேர்தலில் அ தி மு க சார்பாக போட்டியிட பா ம க கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. முன்னதாக  பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை நேரடியாக சந்தித்து அ தி மு க சார்பாக பல கட்டங்களாக பேசிவந்தனர். ஆனால் பா.ம.க. தரப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கினால் மட்டுமே கூட்டணியை உறுதி செய்ய முடியும் என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.ஆனால் இந்த கோரிக்கைக்கு அ.தி.மு.க. அரசு மவுனம் சாதித்து வந்த நிலையில்,  சட்டசபையில் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கி அரசு தீர்மானமாக கொண்டுவந்து மசோதவாக நிறைவேற்றப்பட்டது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சட்ட மன்ற தேர்தலில் பா ம க போட்டியிட விரும்பும் 23 தொகுதிகளின் பட்டியலை அ தி முகவிடம் வழங்கி இருக்கிறது. அதில் 1. வேளச்சேரி, 2. சோளிங்கர், 3. கும்மிடிப்பூண்டி, 4. செங்கல்பட்டு, 5. திருப்போரூர், 6. உத்திரமேரூர், 7. குடியாத்தம், 8. திருப்பத்தூர், 9. வேப்பனஹள்ளி, 10. பாப்பிரெட்டிபட்டி, 11. பாலக்கோடு, 12.வந்தவாசி , 13. செஞ்சி, 14. மயிலம், 15. திருக்கோவிலூர், 16. ஓமலூர், 17. மேட்டூர், 18. பரமத்திவேலூர், 19. ஆற்காடு, 20. குறிஞ்சிப்பாடி, 21. புவனகிரி, 22. பண்ருட்டி. 23. அணைக்கட்டு ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Election Updates: `கூட்டணியில் தொகுதிகளைக் குறைத்துக்கொண்டது ஏன்?' -  அன்புமணி ராமதாஸ் விளக்கம்| Tamilnadu election 2021 and other current updates

இது ஒருபுறம் இருக்க கடந்த 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ம.க.வுக்கு அப்போதைய அதிமுக தலைவரான ஜெயலலிதா 27 தொகுதிகள் ஒதுக்கினார். அதில் செங்கல்பட்டு, அச்சரப்பாக்கம் (தனி), பூந்தமல்லி, திருத்தணி, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர், செய்யாறு, வந்தவாசி (தனி),பண்ருட்டி, விருத்தாச்சலம், சங்கராபுரம், தருமபுரி, பென்னாகரம் தாரமங்கலம், சேலம்-2, கபிலர்மலை, எடப்பாடி, தாராபுரம், அந்தியூர், ஆண்டிமடம் ஆகிய 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

Advertisement