பயிற்சியின் போது 16 வயது பெண்ணிடம் பாலியல் தொல்லை – ஷங்கர் மருமகன் மற்றும் அவரது தந்தை மீதும் போக்சோ

0
16691
shankar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரம்மாண்டம் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது சங்கர் தான். இவருடைய படங்கள் எல்லாமே பிரம்மாண்டமாகவும், பார்ப்போரை வியப்பில் வைக்கும் வகையிலும் இருக்கும். இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் மருமகன் 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட தகவல் சமூகவலைத்தளங்களில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனும், மதுரை பாந்தர் கிரிக்கெட் அணியின் உரிமையாளரின் மகன் தான் ரோகித் தாமோதரன்.

-விளம்பரம்-

புதுச்சேரியில் இளங்கோவடிகள் அரசு பள்ளி மைதானத்தில் மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அப்போது கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் என்பவர் 16 வயது மாணவிக்கு பயிற்சி அளிக்கும்போது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கிரிக்கெட் சங்க நிர்வாகிகளிடம் புகார் செய்து உள்ளார். ஆனால், சங்க நிர்வாகிகள் பயிற்சி அளிக்கும் நபரிடம் மோதல் வேண்டாம் அனுசரித்து போ என்று கூறி விட்டார்கள்.

- Advertisement -

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நல குழுவிடம் புகார் செய்தார். இதையடுத்து குழந்தைகள் நல குழுவினர் விசாரணை நடத்தி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்து உள்ளார்கள். புகாரின் பேரில் மாணவி கிரிக்கெட் விளையாட பயிற்சி அளித்த கிரிக்கெட் வீரர் தாமரைக்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின் கிரிக்கெட் வீரர் செய்த தவறுக்கு நடவடிக்கை எடுக்காமல் சாதகமாக செயல்பட்டதாக மற்றொரு கிரிக்கெட் வீரர் ஜெயக்குமார், கிரிக்கெட் சங்க தலைவர் தாமோதரன், செயலாளர் வெங்கட், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் உட்பட 5 பேர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் வேற யாரும் இல்லைங்க பிரபல இயக்குனரின் மருமகன். இவருக்கும் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் உட்பட சினிமா பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு இருந்தார்கள். ஷங்கரின் மருமகன் ரோகித் தாமோதரன் மீது வழக்கு பதிவு செய்துள்ள தகவல் கோலிவுட் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement