‘போடா டேய்’ பொங்கல் அன்று ஆனந்த் மஹிந்திராவின் தமிழ் ட்வீட் படு வைரல் – அப்படி என்ன போட்டுள்ளார் பாருங்க.

0
639
anand
- Advertisement -

இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் நேற்று பொங்கல் பண்டிகை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் தமிழ் நாட்டு கலாச்சார நிகழ்வுகளும், பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் நடந்து வருகின்றன. தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் விளையாட்டாக ஜல்லிக்கட்டு திகழ்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த வீர விளையாட்டு நடத்தப்பட்டு வருகிறது.

-விளம்பரம்-
எத்தனை மணிக்கு பொங்கல் வைக்கலாம்? | pongal timing

குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இது ஒரு பக்கம் சோஷியல் மீடியாவில் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் பொங்கல் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராக இருக்கும் ஆனந்த் மஹேந்திரா பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டீவ்ட் ஒன்று போட்டு உள்ளார்.

- Advertisement -

ஆனந்த் மகேந்திரா பற்றிய தகவல்:

தற்போது அது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருப்பவர் ஆனந்த் மகேந்திரா. இவருடைய சொத்து மதிப்பு மட்டும் 190 டாலருக்கு மேல் என்று சொல்லலாம். மேலும், இவர் மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆவார். இவர் தொழிலில் எப்படி சாதித்து உயர்ந்து கொண்டே போகிறாரோ அதேபோல் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

அயர்ன் மேன் மாணவனுக்கு ஆனந்த் மஹிந்திரா உதவி | Dinamalar Tamil News

ஆனந்த் மகேந்திரா டீவ்ட்:

இவரைப் பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் நல்லவிதமான கருத்துக்களைத் தான் பதிவிட்டு வருவார்கள். மேலும், டுவிட்டரில் இவருடைய பதிவுகளை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் கூட்டம் உள்ளது. மேலும், இவர் சமூக சிந்தனையும், தொழில் சார்ந்த அறிவிப்புகள் மட்டுமில்லாமல் சுவாரசியமான நிகழ்வுகள், நகைச்சுவை சம்பவம் என பலரையும் பதிவிட்டு வருகிறார்.

-விளம்பரம்-

பொங்கலன்று ஆனந்த் மகேந்திரா பதிவிட்டது:

இப்படி ஒரு நிலையில் பொங்கலன்று இவர் தமிழ் மொழி பற்றியும் தமிழ்நாட்டைப் பற்றியும் சுவாரசியமான கருத்து ஒன்று பதிவிட்டுள்ளார். ஆனந்த் மகேந்திரா தனது டுவிட்டரில் கூறியிருப்பது, நான் பள்ளிப் படிப்பைத் தமிழகத்தில் தான் முடித்தேன். ஆனால், தமிழில் நான் கற்றுக்கொண்ட முதல் சொல் ஒன்று உள்ளது. அந்த சொல்லை நான் அடிக்கடி பயன்படுத்தி இருக்கிறேன். சில சமயம் சத்தமாகவும் , சில சமயங்களில் மனதுக்குள்ளும் சொல்லியிருக்கிறேன்.

ட்ரெண்டிங் ஆக்கும் நெட்டிசன்கள்:

அது வேற ஒன்றும் இல்லை போடா டேய் என்ற வார்த்தை. மேலும், தமிழ் மொழி ஒரு ஆற்றல் மிகுந்த மொழி. உதாரணமாக, ஆங்கிலத்தில் நாம் யாரிடமாவது உங்களது பேச்சைக் கேட்கவும் , உங்கள் கருத்தை அறிந்து கொள்ளவும் எனக்கு நேரமில்லை. அதனால் என்னை விடுங்கள் என சொல்வதற்கு தமிழில் எளிதாக “போடா டேய்” என சொன்னால் போதும் என்று பதிவிட்டிருந்தார். இவரின் இந்த “போடா டேய்” என்ற வார்த்தையை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement