ஜோதிகா குறிப்பிட்டு பேசிய மருத்துவமனையில் சிக்கிய பல விஷப்பாம்புகள், ஒருவர் பலி- வைரலாகும் வீடியோ.

0
11627
Jyothika
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் டாப் ஹீரோயினியாக கலக்கியவர் நடிகை ஜோதிகா. ஹிந்தி படத்தின் மூலம் தான் ஜோதிகா சினிமா துறைக்குள் என்ட்ரி கொடுத்தார். இவர் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் , விக்ரம், சூர்யா என்று பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார். இவர் தமிழ் மொழி மட்டும் இல்லாமல் தென்னிந்திய மொழிகளில் கொடி கட்டி பறந்தார். பின்னர் தன்னுடன் நடித்த நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் விருது விழா ஒன்றில் நடிகை ஜோதிகா தஞ்சை பெரிய கோவில் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வளைதளத்தில் பெரும் சர்ச்சையாக எழுந்தது.

-விளம்பரம்-

அந்த விழாவில் ஜோதிகா அவர்கள் கூறியது, தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அந்த மருத்துவமனையை மிக மேசமாக பராமரித்து வந்தனர். அங்கு நான் பார்த்தவற்றை என் வாயால் கூட சொல்ல முடியாது. அந்த அளவிற்கு கொடூரமாக இருந்தது. எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க.

இதையும் பாருங்க : கண்ணீர் மல்க கைகூப்பி கும்பிட்டு இயக்குனரின் காலில் விழுந்த நயன். வைரலாகும் வீடியோ.

- Advertisement -

அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும், அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவமனையைப் பராமரிக்கவும் உதவுங்கள் என்று விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. ஜோதிகாவின் இந்த பேச்சுக்கு பலர் விமர்சித்தும், பலர் ஆதரவு அளித்தும் கருத்துக்களை தெரிவித்தனர்.

இதற்கு ஜோதிகாவின் கணவரும், நடிகருமான சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் “மரம் சும்மா இருந்தாலும் காற்று விடுவதாக இல்லை என்றும் அன்பை விதைப்போம்” என்றும் குறிப்பிட்டு பேசினார். இந்த நிலையில் நடிகை ஜோதிகா குறிப்பிட்டு பேசிய அந்த தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் பெண் ஊழியரைப் பாம்பு கடித்து உள்ளது.

-விளம்பரம்-

அதன் பின்பு பாம்பு கடித்த ஊழியரைத் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சை அரசு ராஜா மிராசுதார் மருத்துவமனையை சுத்தம் செய்தார்கள். அதில் 10- க்கும் மேற்பட்ட விஷப்பாம்புகளை வனத்துறையினர் பிடித்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்பகுதி பெரும் பரபரப்பில் உள்ளது.

இதையும் பாருங்க : 9 ஆண்டுகளுக்கு முன்பு அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு எடுத்த அதிரடி முடிவு. இதோ அந்த அறிக்கை.

மேலும், இது குறித்து ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தின் இயக்குனர் தற்போது பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியது, பொன்மகள் வந்தாள் படத்தின் ஷூட்டிங்கின் போது தான் அந்த மருத்துவமனை சம்பவம் நடந்தது. அப்போதே நடிகை ஜோதிகா அவர்கள் மருத்துவமனை பற்றி கூறி வருத்தப்பட்டதார். நடிகை ஜோதிகா சொன்ன பிறகு தான் அரசு அதிகாரிகள் அந்த மருத்துவமனையை சரிபார்த்து ஒழுங்குபடுத்தினர். நமக்கு தெரிந்தது அகரம் மட்டும் தான். ஆனால் நமக்கு தெரியாமல் அவர் பல பெரிய, பெரிய உதவிகளை செய்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

Advertisement