கண்ணீர் மல்க கைகூப்பி கும்பிட்டு இயக்குனரின் காலில் விழுந்த நயன். வைரலாகும் வீடியோ.

0
6877
nayanthara

தென்னிந்திய சினிமா திரை உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. நயன்தாரா அவர்கள் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் அதிலிருந்து மீண்டு தற்போது தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் ஒன் நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு ‘மனசினகாரே’ என்ற மலையாள மொழி திரைப்படம் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானர். தமிழில் இவர் 2005ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நயன்தாரா அவர்கள் நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் நடிகை ஆவார். சமீப காலமாகவே நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்தெடுத்து நடித்து வருகிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட். கடந்த ஆண்டு நடிகை நயன்தாரா அவர்கள் தல அஜீத்துடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘விஸ்வாசம்’ படம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார்.

- Advertisement -
Nayanthara

அதை தொடர்ந்து தெலுங்கில் சிரஞ்சீவியின் நடிப்பில் வெளிவந்த ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்தில் நடிகை நயன்தாரா சிறப்பான தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் படத்திலும் இவருடைய நடிப்பு சும்மா கிழி. நயன்தாரா அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனை பல ஆண்டு காலமாக காதலித்து வருகிறார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்வதாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : காதல் அழிவதில்லை படத்திற்கு முன்பாவே சினிமாவில் தோன்றியுள்ள சந்தானம். அதுவும் மறைந்த இந்த இளம் நடிகர் படத்தில்.

அது மட்டும் இல்லாமல் இவர்கள் இருவரும் அடிக்கடி தங்களுடைய புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாரா அவர்கள் தெலுங்கில் நடித்த ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தின் சூட்டிங் ஸ்பாட்டில் காலில் விழுந்து கதறி அழுத வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாபு இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான இந்து பக்தி திரைப்படம் தான் ஸ்ரீராம ராஜ்யம். இந்த படத்தை சிறீ சாய் பாபா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படத்தில் நந்தமூரி பாலகிருஷ்ணா, நயன்தாரா, கே ஆர் விஜயா, ரோஜா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த படத்திற்கு இளையராஜா அவர்கள் இசையமைத்திருந்தார். இந்த படம் இந்து சமய இதிகாசங்களில் ஒன்றான ராமாயண கதையை மையமாகக் கொண்டது. மேலும், இந்த படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் சீதை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அற்புதமாக கதைக்கு ஏற்றவாறு தன்னுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தார் நயன்தாரா. இந்நிலையில் இந்த படத்தின் ஷூட்டிங்கை நல்லபடியாக நயன்தாரா முடித்துக் கொடுத்ததற்காக படக்குழுவினர் அனைவரும் நயன்தாரா மீது மலர்களைத் தூவி வாழ்த்துக்கள் கூறினார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நயன்தாரா அவர்கள் சூட்டிங் ஸ்பாட்டிலேயே ஆனந்த கண்ணீரில் அழத் தொடங்கினார். பின் படக்குழுவினர் அனைவரையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டார். மேலும், இயக்குனர் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.

இதையும் பாருங்க : இவரை கொல்லாம இவரே ஏன் அந்நியன் கொன்னாரு. கேள்வி கேட்ட ரசிகரை பிளாக் செய்த ஷங்கர்.

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் இதை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். தற்போது நயன்தாரா அவர்கள் ஆர்ஜே பாலாஜி உடன் இணைந்து முக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய காதலன் விக்னேஷ் சிவன் உருவாகி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடிக்கிறார். இதனை தொடர்ந்து நெற்றிக்கண் என்ற படத்திலும் நயன்தாரா அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement