போக்கிரி படத்தில் கேங்ஸ்டர் குரூப்பில் வந்த நடிகையை ஞாபகம் இருக்கா ? புள்ள குட்டின்னு எப்படி ஆகிட்டாங்க பாருங்க.

0
1191
brinda
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை நடிகர்களை விட நடிகைகளின் சினிமா ஆயுள் மிகவும் குறைவு தான். 90ஸ் காலகட்டத்தில் நடித்த பல நடிகர்கள் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஜோடியாக நடித்த பல நடிகைகள் ஆள் அட்ரஸ்ஸே இல்லாமல் போய்விட்டனர். அதே போல ஹேமா மாலினி, சில்க் ஸ்மிதா துவங்கி பல கவர்ச்சி நடிகைகள் மக்கள் மனதை கவர்ந்து இருக்கின்றன். அதே போல் தமிழ் சினிமாவை பொறுத்த வரை ஒரு சில படங்களில் சைட் ரோலில் வரும் நடிகைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விடுவார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-201.jpg

அதுவும் கேங்ஸ்டர் படம் என்றால் அதில் ரிவால்வர் ரீட்டா போல ஒரு கதாபாத்திரத்தை வைத்துவிடுவது தமிழ் சினிமாவில் ஜெமினி கணேசன் காலத்தில் இருந்து தொன்று தொட்டு தொடர்ந்து வரும் ஒரு வழக்கம் தான். அந்த வகையில் போக்கிரி படத்தில் அப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் இந்த நடிகை.

- Advertisement -

சூப்பர் ஹிட் அடித்த போக்கிரி :

நடன இயக்குனராகவும் நடிகராவும் திகழ்ந்து வந்த பிரபு தேவா, தமிழில் போக்கிரி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். விஜய், அசின், பிரகாஷ்ராஜ், வடிவேலு, நெப்போலியன், நாசர் என்று பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் மாபெரும் பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்தது. மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

போக்கிரி மோனா :

இந்த படத்தில் வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜ் கிழக்கில் ரிவால்வர் ரீட்டா போல மோனா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பிருந்தா பரீக். மும்பையில் பிறந்து வளர்ந்த இவர் 2002 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சொந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பின்னர் தமிழ் தெலுங்கு கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

2013ல் திருமணம் :

ஆனால், போக்கிரி படத்தின் மூலம் பிரபலமானார். போக்கிரி படத்திற்கு பின்னர் பொல்லாதவன், குரு என் ஆளு, சில்லுனு ஒரு சந்திப்பு போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். அதேபோல சில மியூசிக் ஆல்பங்களில் கூட நடித்திருக்கிறார்.2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் இவர் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. பட வாய்ப்புகள் குறையவே திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

This image has an empty alt attribute; its file name is image-46.png

குடும்பத்துடன் வெளியான புகைப்படம் :

திருமணத்திற்கு பின்னர் இவர் சினிமாவிற்கு முழுவதும் முழுக்கு போட்டுவிட்டார். அதே போல திருமணத்திற்கு பின்னர் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் பிருந்தா. இதை பார்த்த ரசிகர் பலரும் போக்கிரி படத்தில் வந்த நடிகையா இது என்று ரசிகர்கள் பலர் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

Advertisement