பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் சித்தரவதை செய்து அதனை வீடியோ எடுத்து பின்னர் அதை வைத்து மிரட்டி வந்த கும்பலின் செய்தி தான் தற்போது தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த வழக்கு சம்மந்தமாக 4 பேரை மட்டும் தான் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே ஒரு வீடியோ படு வைரலாக பரவி வந்த நிலையில் பார் நாகராஜ் பெண்களை வலுக்கட்டாயமாக உடலுறவில் ஈடுபட வைத்த மூன்று புதிய விடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதனால் பார் நாகராஜன் மீதும் பாலியில் குற்றத்தில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.
தற்போது அந்த விடீயோவைல் இருப்பது தான் இல்லை என்றும், அது வீடியோவில் இருப்பது சதீஷ் என்றும் கூறி பார் நாகராஜ் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், தன் மீது அடிதடி வழக்கு மட்டும் தான் இருக்கிறது அது தொடர்பாக காவல் துறையினர் எப்போதும் அழைத்தாலும் செல்வேன் என்று கூறியுள்ளார்.