குடி போதையில் விமல் செய்த பிரச்சனை.! போலீசில் புகார்.!

0
535
- Advertisement -

தமிழில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த விமல் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்து வந்தார். தமிழில் இவர் நடித்த களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்ப்பை பெற்றது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக இவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை பெற்றது.
இந்நிலையில் கன்னட நடிகர் அபிஷேக்கை தாக்கியதாக நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

- Advertisement -
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று இரவு நடிகர் விமல் தனது நண்பர்களுடன் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதே விடுதியில் கன்னட நடிகர் அபிஷேக்கும் தங்கி இருந்ததாகவும், அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பின் கைகலப்பானதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தங்களை தாக்கியதாக நடிகர் அபிஷேக்கின் நண்பர்கள் சென்னை விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் நடிகர் விமல் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேர் மீது 294பி என்ற குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விடுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
Advertisement