வனிதா விஜயகுமார் மீது மோசடி புகார் கொடுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சர்ச்சை நாயகியாக இருப்பவர் தான் வனிதா விஜயகுமார். தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான தம்பதிகளான விஜயகுமார்-மஞ்சுளா ஆகியோரின் மகள் தான் வனிதா. ஆரம்பத்தில் இவர் சினிமாவில் சில படங்களில் மட்டும் நடித்திருந்தார். திருமணத்திற்கு பின் வனிதா படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த 'பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் வனிதா கலந்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் வனிதா மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார். பிக் பாஸ் டைட்டிலை அவர் வெல்லா விட்டாலும் போட்டியிலிருந்து வெளியேறிய பிறகு பட வாய்ப்புகள் வனிதாவுக்கு குவிந்து வருகின்றன. தற்போது இவர் நடிகை, பிக் பாஸ் விமர்சகர், சோசியல் மீடியா பிரபலம், சமையல் கலைஞர் மற்றும் மீடியா போன்ற பன்முகங்களை கொண்டவர்.
வனிதா விஜயகுமார் குறித்த தகவல்:
நடிகை வனிதா விஜயகுமார் தற்போது ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ‘மிஸஸ் & மிஸ்டர் ‘ படத்தில் நடித்து வருவது நாம் அறிந்ததே. இந்த படத்தின் அறிவிப்பை கடந்த ஆண்டு அக்டோபர் ஐந்தாம் தேதி ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து வனிதா வெளியிட்டு இருந்தார். இந்தப் படத்தை வனிதாவே எழுதி இயக்கியும் இருக்கிறார். மேலும், இப்படத்தின் மூலம் வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகா விஜயகுமாரை திரைத்துறைக்குள் கொண்டு வந்திருக்கிறார் .

மிஸஸ் & மிஸ்டர் படம்:
அதாவது படத்தின் தயாரிப்பு பொறுப்பை ஜோவிகா கவனித்து இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் வனிதா மற்றும் ராபர்ட் மாஸ்டருடன் இணைந்து ஷகிலா, பிரேம்ஜி, ரவிகாந்த், தெலுங்கு நடிகர் சுனில் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்திருக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் சூட்டிங் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ்க்கு தயாராக இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தில் ராபர்ட் மாஸ்டர்- வனிதா திருமணம் செய்வது போன்ற காட்சி இணையத்தில் வைலாகி இருந்தது. இது உண்மையா? படத்திற்காக எடுக்கப்பட்டதா? என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள்.

வனிதா மீது புகார்:
இப்படி இருக்கும் நிலையில் வனிதா மீது புகார் கொடுத்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தன்ராஜ் என்பவர் காசோலை மோசடி வழக்கை தான் வனிதா மீது கொடுத்திருக்கிறார். அதில் அவர், Mrs & Mr படத்தின் சாட்டிலைட் உரிமைக்காக வனிதா 40 லட்சம் ரூபாய் அளவில் காசோலை எனக்கு கொடுத்தார். ஆனால், அவர் என்னை ஏமாற்றி விட்டார். உடனடியாக வனிதா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார்.

வனிதா அளித்த பேட்டி:
மேலும், இது தொடர்பாக அளித்த பேட்டியில் வனிதா, எனக்கு அந்த நபர் யார் என்று எனக்கு தெரியாது. என்னுடைய கையெழுத்தை போலியாக போட்டு என் மீது வழக்கு தொடர்ந்து இருக்கிறார். எனக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமே கிடையாது என்று கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் தன்ராஜ் மீது புகார் அளித்திருக்கிறார் வனிதா.






