ஓட்டுநருடன் வாக்கு வாதம், வெளியான பேருந்தில் இருந்த CCTV காட்சி – சேரன் மீது புகார்

0
244
- Advertisement -

இயக்குனர் சேரன் மீது போலீசில் புகார் அளித்திருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கடலூர்- புதுச்சேரிக்கு இடையில் 150-க்கும் அதிகமான தனியார் பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பேருந்துகள் எல்லாம் 3 நிமிட இடைவெளியில் தான் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதால் அதிக ஒலி எழுப்பும். அதோடு இந்த வகையான ஏர் ஹாரன் முற்றிலுமே தடைசெய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இருந்தாலும், சில பேருந்துகளில் இந்த ஏர் ஹாரனை பயன்படுத்தி மற்ற வாகனங்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் வகையில் பேருந்துகளை ஓட்டுனர்கள் இயக்கி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் புதுச்சேரியில் இருந்து கடலூரை நோக்கி தனியார் பேருந்து ஒன்று அதிக ஹாரன் சத்தத்துடன் வந்தது. அப்போது அந்த பேருந்துக்கு முன்னாடி நடிகரும், இயக்குனருமான சேரனுடைய கார் சென்று இருந்தது.

- Advertisement -

சாலையில் சேரன் செய்தது :

பின் கடலூர் அருகே உள்ள பெரிய கங்கணாங்குப்பம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது. இருந்தாலும், அந்த இடத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர் அதிக அளவு சத்தத்துடன் ஹாரனை அடித்துக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சேரன், நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு அதிக சத்தம் எழுப்பிய ஓட்டுனரிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருந்தார். அப்போது சேரன், சாலையில் ஒதுங்குவதற்கு கொஞ்சம் கூட வழியில்லாத போது இப்படி ஒலி எழுப்பலாமா? என்று கேட்டிருந்தார்.

சேரன் சொன்னது :

அதற்கு அந்த ஓட்டுநரும் வாக்குவாதம் செய்தார். கடைசியில் சேரன் ஒதுங்குவதற்கும், வழி விடுவதற்கும் இடமில்லாத போது தொடர்ந்து இப்படி மற்ற வாகனங்களையும், பொதுமக்களையும் அச்சுறுத்தும் விதமாக பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள் மீது போக்குவரத்து துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பொது மக்களும் ஆதரவாக நிற்க வேண்டும் என்று பேசி இருந்தார். இப்படி சேரன் செய்த செயலை பார்த்த அருகில் இருந்தவர்களும், மற்ற பேருந்து நடத்துனர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் ஆகியோரும் ஒன்று திரண்டு பாராட்டியும், அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் இருந்தார்கள்.

-விளம்பரம்-

சேரன் மீது புகார்:

இந்த நிலையில் சேரன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்ட சம்பவம் தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது. அதாவது, கடலூரில் தனியார் பஸ் ஓட்டுநரிடம் இயக்குனர் சேரன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்ததால் சிசிடிவி காட்சிகளுடன் காவல் நிலையத்தில் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சேரன் மீது புகார் அளித்திருக்கிறார்கள். அந்த புகாரில், இயக்குனர் சேரன் நடு வழியிலேயே பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தகராறு செய்தது தவறு என்று கூறியிருக்கிறார்கள். தற்போது இந்த விவகாரம் தான் இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

சேரன் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் சேரன். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகரும் ஆவார். இவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளிவந்த திருமணம் படத்தை இயக்கி இருந்தார். அதற்குப் பிறகு இவர் நடிப்பதில் தான் அதிக கவனம் செலுத்தி வந்திருக்கிறார். அதோடு இவர் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து இறுதி வரை சென்று இருந்தார். அதன் பின் இவருக்கு சினிமாவில் பட வாய்ப்புகள் கிடைத்தது. சிறிய இடைவெளிக்கு பிறகு சேரன் இயக்கத்தில், சமீபத்தில் வெளியாகி இருந்த பயணம் வெப் சீரிஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

Advertisement