நயன்தாரா- விக்னேஷ் சிவனை கைது செய்ய வேண்டும், போலீசில் புகார் அளித்த சமூக ஆர்வலர்- பின்னணி என்ன?

0
226
Vignesh-shivan
- Advertisement -

ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக படத்தயாரிப்பு நிறுவனம் துவங்கியிருக்கும் நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என போலீசில் புகார் எழுந்துள்ள சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன்- நயன்தாரா. விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா அவர்கள் சிம்பு, பிரபுதேவாவை காதலித்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், இந்த இரண்டு காதலை விட விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் நயன்தாரா மிகவும் உறுதியாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-
nayanthara

மேலும், இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி வெளிநாடு செல்வது அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போடுவது என்று காதல் புறாக்களாகவே இருக்கிறார்கள். நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இல்லாமல் செல்வதே இல்லை. அதோடு இவர்களைப் பற்றி ஏதாவது ஒரு நியூஸ் கிடைத்தால் போதும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பயங்கர ட்ரென்டிங் ஆகிவிடுவார்கள். மேலும், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் என பலரும் இவர்களுடைய திருமணம் குறித்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

- Advertisement -

விக்னேஷ் சிவன் – நயன்தாரா காதல்:

அதற்கு, நாங்கள் இருவரும் அவரவர் வேலையை பார்த்து இருக்கிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது. அதனை முடித்த பின்னர் தான் திருமணம் என்று கூறி இருந்தார்கள். கடந்த ஆண்டு நயன்தாரா-விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் மிகவும் privateஆக முடிந்தது. ஆனால், நிச்சயம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்கள். இவர்கள் இருவரும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறார்கள். கடந்த ஆண்டு இவர்கள் தயாரிப்பில் வெளிவந்த ராக்கி படம் நல்ல விமர்சனத்தை மக்கள் மத்தியில் பெற்று இருந்தது.

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திரைப்பயணம்:

இதனைத் தொடர்ந்து தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து காத்துவாக்குல 2 காதல் படத்தில் பணிபுரிந்து இருக்கிறார்கள். இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா நடிக்கிறார் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் படம், அல்போன்ஸ் புத்திரன் படம் போன்ற பல படங்களில் நயன் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில் நயன்தாராவை கைது செய்ய வேண்டும் என்று போலீசில் புகார் அளித்து உள்ளார் கண்ணன். சாலி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் – நயன்தாரா மீது புகார்:

இவர் சமூக ஆர்வலர். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது புகார் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் ஏகே 62 என்ற படத்தை இயக்க இருப்பதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக விக்னேஷ் சிவன் வீட்டில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார். மேலும், இந்த பட்டாசு வெடித்துக் கொண்டாடியதில் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியபவர்களும் பங்கேற்றுள்ளனர். ரவுடிகளை ஒழிக்க தமிழக போலீஸ் அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆனால் சமூகப் பொறுப்பின்றி இயக்குனர் விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ரவுடி பிக்சர்ஸ் என்ற பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கி இருப்பது பொது மக்களை அதிர்ச்சி அடையச் செய்திருக்கிறது.

vignesh

விக்னேஷ் சிவன் – நயன்தாராவை கைது செய்ய காரணம்:

ஆகவே, ரவுடி பிக்சர்ஸ் பட தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும். இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். பின் இதுகுறித்து விசாரித்த போலீஸ் அதிகாரிகள் கூறியிருப்பது, ரவுடி பிக்சர்ஸ் என பெயர் சூட்டுவது அனாகரிகம். இப்பெயரே பொதுமக்களுக்கு எரிச்சல் ஏற்படுத்துகிறது. விக்னேஷ் சிவன் – நயன்தாரா பட நிறுவனத்திற்கு நல்ல பெயரை சூட்டவேண்டும். தேவையில்லாத பிரச்சனைகள் குறையும் என்று கூறி உள்ளார்கள். இதனை அடுத்து விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement