திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை தற்போது விளக்கம் அளித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே திருப்பதியில் லட்டு குறித்த செய்தி தான் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. திருப்பதியில் வழங்கப்படும் பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலப்பதாக எழுந்த சர்ச்சை தேசிய அளவில் பெரும் பரபரப்பையும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இது தொடர்பாக பிரபலங்கள் பலரும் கண்டனங்கள் தெரிவித்திருந்தார்கள். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் அளித்த பேட்டியில் மோகன் ஜி, இந்த பிரச்சனையில் முழுக்க முழுக்க பொறுப்பேற்க வேண்டியது திருப்பதி தேவஸ்தானம் தான்.
இப்ப கொழுப்பு மாதிரி, யாராவது விஷம் கலந்து இருந்தா என்ன ஆகி இருக்கும். இது குறித்து பெரிய பிரபலங்கள் யாரும் கேள்வி எழுப்பவில்லை. மேலும், இந்த மாதிரி பிரச்சனைகள் தமிழ்நாட்டிலும் இருக்கிறது. நான் கேள்விப்பட்ட ஒரு விஷயத்தை சொல்கிறேன். நம்ம ரொம்ப புனிதமாக நினைக்கிற ஒரு கோவிலில் பஞ்சாமிர்தத்திலும், ஆண்மை குறைவு ஏற்படுத்துற மாத்திரைகளை கலப்பதாக செவி வழியாக கேள்விப்பட்டேன். பிறகு அந்த செய்தி வெளியே வராமல் தடுத்து, எல்லாத்தையும் தடயம் இல்லாமல் அழித்துவிட்டார்கள். இதுகுறித்து பல பேர் விளக்கம் அளித்து இருந்தாலும், எனக்கு வந்த தகவலின்படி பஞ்சாமிர்தத்தில் கருத்ததடை மாத்திரைகளை பயன்படுத்தியிருக்கிறார்கள்.
மோகன் ஜி பேட்டி:
இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக இது போல் செய்திருப்பதாக சொன்னார்கள். இது போல் விஷயங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக நடக்கலாம். இதை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இருக்கு. இந்த நேரத்தில் இதை நாம் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். பிரசாதம் என்பது ஒரு புனிதமான விஷயம். இப்ப நடந்த விஷயம் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. திருப்பதி கோயிலுக்கு பெருமையாக போயிட்டு வந்து வீடியோ போட்ட பிரபலங்கள் இது குறித்து கேள்விகள் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியிருந்தார்.
Reason For #MohanG Arrest…
— Rajasekar Russalayan (@iamrajesh_pov) September 24, 2024
Thooki Ulla Vainga Thappey Illa… pic.twitter.com/K1dv5PsZ5u
மோகன் ஜி கைது:
இப்படி இவர் அளித்த பேட்டி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டுள்ளதாக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து இருந்தார். அதோடு சென்னை காசிமேடு இல்லத்தில் இருந்து நேற்று காலை திருச்சி போலசார் மோகன் ஜியை கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது.மோகன் ஜி பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளை கலப்பதாக கூறியிருந்த சர்ச்சை கருத்துக்கள் தான் அவரின் கைதுக்கு காரணமாக இருக்கும் என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ், இயக்குனர் மோகன் ஜி கைது செய்தது குறித்து காவல்துறை சரியான விளக்கம் அளிக்க வேண்டும் என்று கண்டனம் தெரிவித்திருந்தார் .
திருச்சி மாவட்ட காவல்துறை விளக்கம்:
இந்நிலையில் தற்போது திருச்சி மாவட்ட காவல்துறை, இந்து மக்களையும் புண்படுத்தும் விதமாக பேசிய தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி கைது செய்யப்பட்டிருக்கிறார். திருச்சிராப்பள்ளி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அருள்மிகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள இந்து அறநிலை துறையில் மேலாளராக பணிபுரிந்து வரும் கவியரசு அவர்கள் கொடுத்த புகாரில், கடந்த 21. 09. 2024ஆம் தேதி மதியம் ஒரு மணி அளவில் நான் பணியில் இருந்த போது, பக்தர்கள் சிலர் இந்து மதத்தையும், இந்து கோவில்களை பற்றியும் தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி அவர்கள் பேசியதாக பேசிக் கொண்டிருந்தனர்.
கைதுக்கு காரணம்:
இதனைத் தொடர்ந்து எனது செல்போனை பார்த்த போது, IBC youtube வலைதளத்தில், ‘உலகம் முழுவதும் வாழும் இந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா என்ற தலைப்பில்’ அருள்மிகு பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில், பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவு ஏற்படுத்தும் மாத்திரைகளை பயன்படுத்துவதாக, உண்மைக்குப் புறம்பான விமர்சனம் செய்து, கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளதாகவும், தற்சமயம் திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில் அசைவ பொருட்களான மீன் எண்ணெயும், மாட்டுக் கொழுப்பும் கலந்து உள்ளதாக கூறப்படும் விவகாரம் அடங்குவதற்குள், தமிழக மக்களிடையே மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும், கலவரத்தை தூண்டும் வகையிலும், பொய்யான செய்தி பரப்பியதாக, தமிழ் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி மீது நடவடிக்கை எடுக்கும்படி கொடுத்த புகாரின் பெயரில் சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, மேற்படி நபர்கள் செய்யப்பட்டு, நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்’ என்று விளக்கம் அளித்து செய்தியை வெளியிட்டுள்ளது