சிறுமியை மிரட்டிய வழக்கில் சிக்கிய சிக்கா, ரவுடி பேபி சூர்யா புலம்பல்- அதிரடியாக போலீஸ் நடத்திய விசாரணை

0
397
- Advertisement -

மீண்டும் வழக்கில் ரவுடி பேபி சூர்யா- சிக்கா சிக்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சமூக வலைதளத்தின் மூலம் பல நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் டிக் டாக் மூலம் பிரபலமானவர் தான் ரவுடி பேபி சூர்யா. டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இவர்கள் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸில் தன்னுடைய கவனத்தை திருப்பினார். அதிலும் திருமணம் ஆகி தோலுக்கு மேல் ஒரு பிள்ளை இருக்கும் நிலையில் இவர் சிக்கா என்பவருடன் அடிக்கும் கூத்து கொஞ்சம் நஞ்சம் இல்லை.

-விளம்பரம்-

ஏற்கனவே இவர் பாலியல் தொழிலில் ஈடுப்பட்டதும், டிக் டாக் இலக்கியாவை பாலியில் தொழிலுக்கு ஈடுபட உதவியதும் அம்பலமானது. இப்படி இருக்க ஆபாசமாக வீடியோக்களை பதிவிட்டு வருவதாக சூர்யா மீது சென்னை சைபர் கிரைம் போலீசில் கமிஷனர் அலுவலகத்திலும், தமிழக டிஜிபி அலுவலகத்திலும் புகார் கொடுத்திருந்தார்கள். இதையடுத்து கோவை சைபர் கிரைம் போலீசார் ரவுடி பேபி சூர்யாவையும், சிக்காவையும் மதுரையில் வைத்து கைது செய்து இருந்தது. இவர் மீது நிறைய பெண்கள் புகார் கொடுத்திருந்தார்கள்.

- Advertisement -

ரவுடி பேபி சூர்யா-சிக்கா:

மேலும், இவர்களுடைய யூடியூப் சேனலை முடக்க கோரியும் புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் ஜாமினில் வெளியில் வந்தார்கள். சிறை தண்டை அனுபவித்தும் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்து இருக்கிறார் ரவுடி பேபி சூர்யா. இந்த நிலையில் ரவுடி பேபியின் மகனை போலீஸ் கைது செய்து இருக்கும் சம்பவம் கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. புதுச்சேரியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு சோசியல் மீடியாவின் மூலம் மெசேஜ் வந்து, நட்பு ரீதியில் முதலில் அந்த சிறுமியிடம் பழகி இருக்கிறார் சிக்கா மகன்.

அஷ்ரப் கைது:

நாளடைவில் அவர், தான் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்வதாகவும் அந்த சிறுமியிடம் கூறி இருந்தார். அந்த சிறுமியும் அவர் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பிவிட்டார். அதற்கு பிறகு ஆபாச வீடியோக்களை அனுப்பியும், சிறுமியின் நிர்வாண புகைப்படம், வீடியோக்களை கேட்டும் தொடர்ந்து அந்த நபர் தொல்லை செய்து இருந்தார். இதை அறிந்த சிறுமியின் தாயார் அதிர்ச்சி அடைந்து புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்திருந்தார். அதற்கு பிறகு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்த போது மதுரையை சேர்ந்த பிரபல youtuber சிக்கா மற்றும் சுமி தம்பதியினரின் மகன் அஷ்ரப் தான் இந்த கேவலமான வேலையை செய்தது தெரிந்தது.

-விளம்பரம்-

போலீஸ் விசாரணை:

அதோடு ரவுடி பேபி சூர்யா அவனுக்கு சித்தி ஆவார். பின் புதுச்சேரி போலீசார் அஷ்ரபை கைது செய்து விசாரணை நடத்தி இருந்தது. அப்போது அவருடைய மொபைல் போனில் நிறைய பெண்களுக்கு ஆபாசமாக வீடியோக்களையும், செய்தியையும் அனுப்பி இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து நீதிமன்ற உத்தரவின் பெயரில் அஷ்ரப் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அந்த சிறுமியின் தாயார் கொடுத்த புகாரில், சிக்கா- சுமி, ரவுடி பேபி சூர்யா ஆகியோர் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார்கள்.

மீண்டும் சிக்கிய சிக்கா-சூர்யா:

இந்நிலையில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸில் விசாரணைக்கு சிக்கா- சுமி தம்பதியினர், ரவுடி பேபி சூர்யா ஆஜராகி இருக்கிறார்கள். அஷ்ரப் வழக்கு தொடர்பாக மூவரிடமே போலீசார் விசாரித்திருக்கிறார்கள். அப்போது மூவருமே, எங்களுக்கும் இந்த வழக்கத்துக்கும் சம்பந்தம் இல்லை. நாங்கள் மீடியா ஆரம்பித்து எங்களுக்குள் நடக்கும் சண்டையை தான் போட்டிருக்கிறோம். மத்தபடி இவர்கள் அளித்திருக்கும் புகாருக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. நாங்கள் வாழக்கூடாது என்றும், எங்களை அழிக்க தான் இப்படி எல்லாம் எங்கள் மீது புகார் கொடுத்து வருகிறார்கள். அந்த புகார் கொடுத்த பெண்ணையும் அவருடைய அம்மாவையும் நாங்கள் பார்த்தது கூட கிடையாது. யாரோ எங்களை அழிக்க தான் திட்டமிட்டு தேவையில்லாத வேலை செய்கிறார்கள். எங்கள் மீது தவறு இருந்தால் நீங்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்கிறார்கள்.

Advertisement