வனிதாவை தொடர்ந்து மீரா மிதுனுக்கும் காவல் நிலையத்தில் ஆஜராக போலீஸ் சம்மன்.!

0
2193
Meera-Mithun
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கி 9 நாட்கள் தான் ஆகியுள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள வனிதாவிடம் மகளை கடத்தியது சம்பந்தமாக வனிதாவின் இரண்டாவது கணவர் போலீசில் கொடுத்த புகாரின் பெயரில் விசாரணை நடைபெற்று வருகிறது.

-விளம்பரம்-
Meera-Mithun

சொந்த மகளை கடத்திய விவகாரத்தில் வனிதா கைது செய்ய படுவாரா என்று எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மற்றுமொரு போட்டியாளரான மீரா மிதுனுக்கு பண மோசடி விவகாரத்தில் போலீசார் சம்மன் அளித்துள்ளது மற்றும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுளளது.

இதையும் பாருங்க : குடும்ப குத்து விளக்காய் இருந்த வாணி போஜன்.! எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க.! 

- Advertisement -

மாடல் அழகியான மீரா மிதுன் அழகி என்ற பெயரில் பல்வேறு மோசடிகளை செய்துள்ளார் என்று கேரளாவை சேர்ந்த ஜோ மைக்கேல் என்ற நபர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி அளித்த ஜோ மைக்கேல், மீரா மிதுன் மீது பல்வேறு மோசடி வழக்குகள் இருக்கிறது என்று அவர் கூறியிருந்தார்.

Meera-Mithun

இந்த நிலையில் மாடல் அழகியான நிருபா என்ற பெண் அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு நுழைவு கட்டணமாக 3 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை பல்வேறு நபர்களிடம் வசூலித்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் தொடர்ந்து நடத்திவரும் மிஸ் தமிழ்நாடு அமைப்பின் லோகோவை கூட இவர் தவறுதலாக பயன்படுத்தி மாடல்களை தேர்வு செய்து வந்ததாகவும் அதன் மூலம் பல்லாயிரக் கணக்கில் பணம் பறித்ததாகவும் நிருபா தெரிவித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதே போல பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தியாகராய நகரை சேர்ந்த ரஞ்சிதா என்பவர் தந்த புகாரில் அவரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அந்த சம்மனில் மீரா மிதுன் ஜூலை 19 ஆம் தேதி ஆஜராகும்படி சென்னை தேனாம்பேட்டை போலீசார் குறிப்பிட்டுள்ளனர். ஆனால், தற்போது பிக் பாஸில் பங்கேற்றுள்ளதால் நிகழ்ச்சி முடிந்தபின் ஆஜராவதாக மீரா மிதுன் விளக்கமளித்துள்ளாராம்.

Advertisement