ஆம்பள விஷால் ரேஞ்சுக்கு சீன் போட நினைத்த காவலர், அசால்ட்டு ஆறுமுகமான கதை – வீடீயோவை பாருங்க.

0
1158
police
- Advertisement -

பொதுவாகவே சினிமாவில், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் சாகச காட்சிகளை பார்த்து அப்படியே நிஜ வாழ்க்கையிலும் ஒரு சில பேர் செய்து வருகிறார்கள். இதில் அதிகமாக குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தான் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால், தற்போது பெரியவர்களும் இந்த மாதிரி சினிமா மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வரும் சாகசங்களை பார்த்து செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சினிமாவின் மீது உள்ள ஈர்ப்பின் காரணமாக அந்த செயலை செய்துள்ளார்.

-விளம்பரம்-

தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் மனோஜ் யாதவ். இவர் ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு கார்களில் ஏறி நின்ற படியே ஸ்டைலாக வீடியோ ஒன்றை எடுத்து வெளியிட்டுள்ளார். இது பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான் நடித்திருந்த சிங்கம் படத்தின் காட்சியில் இடம் பெற்றிருக்கிறது.

- Advertisement -

இதனை பார்த்த உதவி ஆய்வாளர் அவர்கள் இந்த படத்தில் வரும் கதாநாயகன் போலவே தன்னை எண்ணிக் கொண்டு காவல் துறையில் வேலை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் இரண்டு கார்களுக்கு நடுவே நின்று கொண்டு வீர சாகசம் செய்துள்ளார். இந்த ஸ்டாண்ட் காட்சி சினிமாவில் வேண்டும் ஆனால் நன்றாக இருக்கும். ஆனால், நிஜ வாழ்க்கையில் என்பது கொஞ்சம் யோசித்து கொள்ள வேண்டிய விஷயம் தான். மேலும், இந்த வீடியோவை பார்த்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

அதுமட்டுமில்லாமல் இந்த வீடியோ பல இளைஞர்களுக்கு தவறான வழிகாட்டுதல் புரியும் என்பதற்காக காவல் உதவி ஆய்வாளர் பதவியிலிருந்து மனோஜ்ஜை வேலை நீக்கம் செய்யப்பட்டார். பிறகு சாலை விதியை மீறியதற்காகவும் அவருக்கு ஐயாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த வீடியோ சோசியல் இந்தியா முழுவதும் உள்ள சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது. இறுதியில் ஆம்பள விஷால் ரேஞ்சுக்கு சீன் போடா நினைத்த காவலர் பொல்லாதவன் படத்தில் வந்த விவேக் நடித்த அசால்ட்டு ஆறுமுகமாக ஆகிவிட்டார்.

-விளம்பரம்-
Advertisement