திரைப்படங்களில் போலீசாரை இப்படி சித்தரிப்பதா? முன்னாள் டி.ஜி.பி ஜாங்கிட் வேதனை.

0
486
Jangid
- Advertisement -

திரைப்படங்களில் போலீசாரை தவறாக சித்தரிக்கும் விதம் வேதனை அளிக்கிறது என்று முன்னாள் டிஜிபி அளித்துள்ள பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பொதுவாகவே சினிமா உலகில் போலீஸ் கதாபாத்திரங்களை வைத்து படம் இயக்குவது வழக்கமான ஒன்று. சினிமா தொடங்கிய காலத்தில் இருந்து தற்போது வரை போலீஸ் கதாபாத்திரங்கள் தான் படங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. எம்ஜிஆர்,சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் எல்லோருமே போலீஸ் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

-விளம்பரம்-

போலீஸ் கதாபாத்திரம் தமிழ் மொழி படங்களில் மட்டும் இல்லாமல் அனைத்து வகை மொழி படங்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் போலீஸ் கதாபாத்திரம் பற்றி பரவலாக பேசப்பட்டு வருகிறது. சொல்லப்போனால் சினிமா படங்களை பார்த்து தான் நிஜத்தில் பலரும் போலீஸ் ஆகுகிறார்கள். சமீபத்தில் வெளியான வலிமை படத்திலும் போலீஸ் அஜித் போலீஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியிருப்பார்.

- Advertisement -

படங்களில் போலீஸ் கதாபாத்திரம்:

இப்படி மக்களும் ரசிகர்களும் விரும்பி பார்க்கும் கதாபாத்திரமாக போலீஸ் உள்ளது. ஆனால், சில படங்களில் போலீஸ்காரர்களை குறித்து தவறாக சித்தரித்து வருகிறார்கள். இதனால் மக்களுக்கும் போலீசுக்கும் இடையே வெறுப்பு அதிகமாக ஏற்படுகிறது. இந்த நிலையில் திரைப்படங்களில் போலீசாரை தவறாக சித்தரிப்பது வேதனை அளிக்கிறது என முன்னாள் டிஜிபி ஜாங்கிட் அளித்துள்ள பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

முன்னாள் டிஜிபி ஜாங்கிட் அளித்துள்ள பேட்டி:

சமீபத்தில் கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் முன்னாள் டிஜிபி ஜாங்கிட் பேட்டியளித்திருந்தார். அதில் அவர், மாணவர்கள் குடிமை பணிகளில் சேர வேண்டும். அனைவருக்கும் வெற்றி பெறுவதற்கான தகுதிகள் உள்ளன. அதை உரிய முறையில் பயன்படுத்தினால் போதும். திரைப்படங்களில் மத மோதல்களை ஏற்படுத்துவது போன்ற காட்சிகளை தவிர்க்கலாம். அவர்களுக்கு என ஒரு தர்மம் உள்ளது. அதை பின்பற்ற வேண்டும்.

-விளம்பரம்-

திரைப்படங்களில் போலீஸ் நிலைமை:

திரைப்படங்களில் போலீசாரை கோமாளி போல் சித்தரிப்பது வேதனை அளிக்கிறது. தணிக்கை குழுவினர் இதை தடுத்தாலும் அதை மீறி சில காட்சிகள் வருகின்றன. மக்கள் தான் இதை தடுக்க வேண்டும். படங்களின் மூலம் மக்கள் மத்தியில் போலீஸ் கதாபாத்திரத்தை நன்றாக காண்பித்தால் இன்றைய இளைஞர்களும் நேர்மையான போலீஸ் அதிகாரிகளாக உருவாக வாய்ப்பு இருக்கிறது. மேலும், மாணவர்கள் பலர் உடல் நலம் குறித்த அக்கறை இன்றி உள்ளனர்.

ஒரு போலீஸ் அதிகாரி எப்படி இருக்க வேண்டும்:

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும். போலீசார் பணிக்கு சேரும் போது உடல் தகுதியுடன் உள்ளனர். ஆனால், பணியில் சேர்ந்த பின் பலர் உடற்பகுதியை மேம்படுத்துவது இல்லை. போலீசாரும் தங்களது உடல் தகுதியை மேம்படுத்த வேண்டும். சமீப காலமாக போக்சோ வழக்குகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் வழக்குகள் அதிகரிப்பது போல் தெரிகிறது என்று கூறி உள்ளார். இவர் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

Advertisement