இரவோடு இரவாக முருகதாஸை கைது செய்ய வீட்டிற்கு சென்ற போலீஸ்..!பின்னர் நடந்தது என்ன..!

0
252
Murugadoss

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள சர்கார் படத்திற்கு அரசியல் கட்சியின் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. படத்தில் சர்ச்சையான காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் போராட்டம் நடத்தி வந்த நிலையில் சர்கார் படத்தின் சில காட்ச்சிகள் நீக்கப்படும் என்று படக்குழு சம்மதம் தெரிவித்துள்ளது.

Murugadoss

சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் உள்ளதாக அரசுக்கு தகவல் வந்துள்ளது. படத்தில் அரசின் விலையில்லா பொருட்கள் எரிப்பது போல சில காட்சிகள் உள்ளது அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று அதிமுக கட்சியினர் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதையடுத்து அந்த காட்சிகளை இன்று மதியத்திற்குள் நீக்கிவிடுவோம் என்று படக்குழு சார்பில் தெரிவிக்கபட்டது. இந்நிலையில் நேற்றிரவு 11 மணி அளவில் முருகதாஸை கைது செய்ய போலீசார் அவரது வீட்டிற்கு சென்றதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதே போலமுருகதாஸும்,என்னுடைய வீட்டிற்கு போலீஸ் சென்றுள்ளார்.ஆனால், நான் வீட்டில் இல்லாததால் போலீசார் திரும்பியதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.ஆனால், இதுகுறித்து தெரிவித்துள்ள போலீசார் முருகதாஸை கைது செய்ய செல்லவில்லை என்றும் சாதாரணமான ரோந்து பணிக்காக முருகதாஸ் வீட்டிற்கு சென்றதாகவும் கூறியுள்ளனர்.