வழக்கமா பாலிமர் தான் வச்சி செய்வாங்க, இப்போ பாலிமரையே வச்சி செய்யும் நெட்டிசன்கள். காரணம் இந்த வீடியோ தான்.

0
198449
- Advertisement -

பொதுவாகவே சோசியல் மீடியாவில் சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பலரை குறித்து பல விமர்சன வீடியோக்கள் வெளிவருது சாதாரணமான ஒன்று. அந்த வகையில் தற்போது பிரபல செய்தி சேனலில் பணிபுரியும் ஒரு செய்தி தொகுப்பாளரின் இரண்டு நிமிட வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அதை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள். மேலும், அதைக் குறித்து பல கமெண்டுகளை பதிவிட்டும் வருகிறார்கள்.

-விளம்பரம்-

பாலிமர் நியூஸ் சேனல் எந்த ஒரு சின்ன விஷயத்தையும் பெரிதாக கிண்டலும், கேலியும் செய்வது வழக்கம். இந்த நிலையில் பாலிமர் நியூஸ் சேனலிலே தங்களின் நியூஸ் சேனல் குறித்து ஒரு வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகிறது. அதிலும் பாலிமர் வேல் ராஜ்ஜின் அடுக்கு மொழி செய்தி வர்ணனைக்கு பல ரசிகர்கள் இருகிண்டனர். வேல்ராஜ் தன்னுடைய குரல் மற்றும் மாடுலேஷனுக்கு ஏற்ப தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளவர்.

- Advertisement -

அவர் எப்போதும் எதுகை மோனையாக பல வீடியோக்களை வெளியிடுவார். ஆனால், தற்போது பாலிமர் செய்தி சேனல் வீடீயோவையே ரசிகர்கள் வச்சி செய்து வருகின்றனர். அது என்னவென்றால், பாலிமர் நியூஸ் சேனலில் பெண் செய்தி வாசகர் ஒருவர் 2 நிமிடமாக அமைதியாக தனது செல்போனை பார்த்துக் கொண்டும், பின் கடைசியாக எழுந்து தன்னுடைய முடியை சரி செய்வதுமான வீடியோ.

இதை பாலிமர் நியூஸ் சேனல் லைவ் டெலிகாஸ்ட் பண்ணியிருக்கிறார்கள். தற்போது இந்த 2 நிமிட வீடியோவை நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் காட்டு தீயாய் பரப்பி வருகிறார்கள். அதிலும் பல பேர் இதை பங்கமாக கலாய்த்தும் வருகிறார்கள். செய்தி வாசிப்பின் போது ஒரு சில நொடிகள் தவறு நடப்பது இயல்பு தான்.

-விளம்பரம்-

ஆனால், கிட்டதட்ட இரண்டு நிமிடங்கள் செய்தி வாசிப்பாளர் எதுவும் பேசாமல் எதார்த்தமாக இருக்கும் வீடியோவை யாரும் கவனிக்கவில்லையா என்பது தான் கேள்வி. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement