தந்திரமாக முகநூலில் பெண் டாக்டரை திருநாவுக்கரசு வலையில் சிக்க வைத்தது இப்படித்தான்.! வெளியான ஷாக்கிங் ரிப்போர்ட்.!

0
822

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது பொள்ளாச்சி பாலியல் சம்பவம். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களின் தலைவனாக செயல்பட்ட திருநாவுக்கரசு எம்.பி.ஏ. பட்டதாரி.  வசதியான குடும்பம், சொகுசு கார், பண்ணை தோட்டம் என ஆடம்பரமாக வாழ்ந்து வந்த இவர் கல்லூரியில் படிக்கும்போதே காதல் மன்னனாக வலம் வந்ததாக கூறப்படுகிறது.

இவர் தான் சமூக வலைதளத்தில் பெண்களை பேசி மயக்கி பின்னர் பாலியல் கொடுமைகளை செய்துள்ளார். இவர் பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளும் போது இவரது நண்பர்களை வைத்து வீடியோ எடுத்துள்ளார்.

இதையும் படியுங்க : ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணை கொடூரமாக மிரட்டும் அதிமுக பிரமுகர் நாகராஜ் 3 புதிய வீடியோக்கள்.

இவர்களது வலையில் ஒரு மருத்துவரும் சிக்கியுள்ளார்.
சென்னையில் உள்ள அந்த பிரபல பெண் டாக்டர் ஒருவரிடம், திருநாவுக்கரசு தன்னை ஒரு பெண் என்று முதலில் தன்னை முகநூல் மூலம் அறிமுகப்படுத்திக் கொண்டார். பின்னர் அந்த டாக்டரிடம் செக்ஸ் கேள்விகள்,  பெண்களுக்கான நோய் குறித்து சந்தேகம் கேட்பதுபோல மெசேஜ் தட்ட தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் அவருடன் நெருக்கமாக பேச துவங்கிய திருநாவுக்கரசு அந்த டாக்டரிடம் ஓரின சேர்க்கை வைத்துக்கொள்ளலாமா என்று கேட்க அந்த டாக்டரும் சில ஆபாசமான விடயங்களை பகிர்ந்துள்ளார். பின்னர் அந்த புகைப்படங்களை வைத்து தான் ஒரு ஆண் என்றும் தன்னுடன் படுக்கவில்லை என்றால் அந்த புகைப்படங்களை கணவரிடம் காட்டி விடுவேன் என்று மிரட்டியுள்ளார் திருநாவுக்கரசு.

பின்னர் வேறு வழி இல்லாமல் அந்த டாக்டரும் திருநாவுக்கரசுவிடம் உறவு வைத்துக்கொண்டுள்ளார். பின்னர் அதனை விடியோவாக எடுத்த திருநாவுக்கரசு அந்த விடியோவை வைத்து பணம் மற்றும் நகையை பறித்துள்ளான். இப்படி தான் அந்த டாக்டரின் வாழ்க்கையை சீரழித்துள்ளார் திருநாவுக்கரசு.