கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்தியா, தமிழகத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில் அடுத்தடுத்து உண்மைகள் வெளிவந்த வண்ணமே உள்ளது. இந்நிலையில் 200 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையை சீரழித்ததாக கூறப்பட்டுவரும், பாலியல் பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்காரசின் தாய் பிரபல ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவிக்கையில் தனது மகன் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
மேலும், தனது மகன் மீது அபாண்டமாக பழி சுமத்துகிறார்கள் என்று திருநாவுக்கரசரின் தாய் நீதி மன்ற வாசலிலேயே வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் திருநாவுக்கரசரின் தாய், தனது மகன் குற்றவாளி இல்லை என்று பேட்டி அளித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.