குடிப்பழக்கத்தால் வாழ்க்கையில் நடந்த சோகம்.! சென்ராயனிடம் புலம்பிய பொன்னம்பலம்.!

0
1021
ponambalam

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இப்போது டாப் என்றால் பிக்பாஸ் 2 தான். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர், அதில் மக்களுக்கு மிகவும் பரிட்சியமானவர் வில்லன் நடிகர் ‘கபாலி’ என்ற பொன்னம்பலம்.

ponambalam actor

தமிழ் சினிமாவில் பல படங்களில் வில்லத்தனமான கதாபத்திரங்களில் நடித்திருக்கும் பொன்னம்பலத்திற்கு ஒரு சோகமான பிளாஷ் பேக்கும் இருக்கிறது. சமீபத்தில் பிக் பாஸ் வீட்டில் சக போட்டியாளரான நடிகர் சென்றாயனிடம் தனது சோகமான பகுதிகளை பகிர்ந்துள்ளார் பொன்னம்பலம்.

நடிகர் பொன்னம்பலத்திற்கு பல ஆண்டுகளாக அதிகபடியான குடி பழக்கம் இருந்துள்ளதாம், அதனால் அவரது சிறுநீரகம் 40 சதவீதமும், ஈரல் 70 சதவீதமும் சேதமடைந்துள்ளாதாம். அவர் தற்போது உயிரோடு இருப்பதே கடவுளின் அருள் என்றுன் தன்னுடன் இருந்த நண்பர்கள் பல பேர் குடியால் இறந்துள்ளனர் என கூறி சென்றாயனை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார் பொன்னம்பலம்.

ponambalam actor

அதோடு இத்தனை ஆண்டுகள் சினிமாவில் முரட்டு தனமான வில்லனாக நடித்து வந்த பொன்னம்பலத்தின் முழங்காலிற்கு கிழே சொரணையற்று கிடைக்கிறதாம். அவரது கால்களை சென்ட்ராயன் அழுத்தி பார்க்கும் போது நடிகர் பொன்னம்பலம் வேகமாக அலுத்தாதீங்க தோல் கிழிந்துவிடும்’ என்று கூறியதை நாம் கேட்கும் போது அவரது பரிதாப நிலையை கண்டு மனம் வெதும்பாமல் இருக்க முடியவில்லை.