தமிழ் சினிமா உலகில் என்றென்றும் வசூல் மன்னனாக திகழ்பவர் தளபதி விஜய். மாஸ்டர் படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். மேலும், இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் விஜய்யின் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற படங்களில் ஒன்று தான் வேட்டைக்காரன். இந்த படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார்.
இந்த படம் 2009ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் விஜயுடன் அனுஷ்கா, சலீம் கௌஸ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். அப்போது இந்த படம் போக்கிரி படத்தின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் அவர்கள் எங்கு தப்பு நடந்தாலும் தட்டிக்கேட்கும் நபராக இருப்பார். அதுமட்டுமில்லாமல் தேவராஜ் போலீஸ் போல் தாமும் பெரிய போலீஸ் ஆபீஸராக வேண்டும் என்று கனவோடு விஜய் இருப்பார்.
வேட்டைக்காரன் படம் பற்றிய விவரம்:
பின் 12ஆம் வகுப்பு முடித்தவுடன் விஜய் அவர்கள் தேவராஜ் படித்த கல்லூரியிலேயே சேருகிறார். தேவராஜ் போலவே விஜய் ஆட்டோ ஓட்டி தன்னுடைய படிப்பை முடிக்கிறார். அப்போது படிக்கும்போது விஜய்க்கு ஏற்படும் சிக்கல் பிரச்சனைகள் தான் படத்தின் சுவாரஸ்யமான கதை. கடைசியில் விஜய் போராடி போலீஸ் ஆகுகிறார். இந்த நிலையில் வேட்டைக்காரன் பட பாணியிலேயே புதுச்சேரியில் ஆட்டோ ஓட்டும் இளைஞன் ஒருவர் விடாமுயற்சியால் காவல் தேர்வில் தேர்ச்சி பெற்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
விஜய் பட பாணியில் நிகழ்ந்த சம்பவம்:
புதுச்சேரி ஜீவா நகரை சேர்ந்த இளைஞர் பெயர் கந்தன். இவருக்கு சிறு வயதில் இருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் ஆட்டோ ஓட்டும் தொழிலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் புதுச்சேரியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் தேர்வு தேதி அறிவிப்பு வெளியானது. இதில் எப்படியாவது தன்னுடைய கனவை நனவாக்க வேண்டும் என்று கந்தன் ஆட்டோ ஓட்டிக்கொண்டு உடல்தகுதி தேர்வு செய்து கொண்டும், எழுத்துத் தேர்வுக்கு தயாராகியும் வந்தார்.
ஆட்டோ இளைஞர்- காவலர் அதிகாரி :
இடையில் கந்தனுக்கு பல்வேறு இன்னல்கள் வந்தாலும் தன்னுடைய விடாமுயற்சியினால் உடல்தகுதி தேர்வில் தேர்வானார். அதனைத் தொடர்ந்து அண்மையில் நடந்து முடிந்த எழுத்துத் தேர்விலும் கந்தன் தேர்ச்சி பெற்றுள்ளார். இப்படி தன்னுடைய விடாமுயற்சியினால் ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் காவல் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதற்கு ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கந்தனை பாராட்டி வருகின்றனர்.
கந்தனுக்கு குவியும் பாராட்டு:
தற்போது கந்தனுக்கு 31 வயது ஆகிறது. அதோடு இவருக்கு திருமணம் ஆகி ஒரு வயதில் குழந்தையும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தளபதி விஜய்யின் வேட்டைக்காரன் பட பாணியில் ஆட்டோ ஓட்டும் இளைஞர் ஒருவர் போராடி காவல் அதிகாரியாக ஆகி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் படு வைரலானது தொடர்ந்து பலரும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.