தோழியே நாத்தனாராக அமைஞ்சாங்க- ஆனாலும் கணவரை பிறந்தது ஏன் ? நடிகை மேக்னாவின் விவாகரத்துக்கு காரணம் என்ன?

0
4908
megna
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் இருக்கும் எத்தனையோ பிரபலங்களின் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளது. ரம்யா,டிடி,மைனா,பவானி ரெட்டி என்று இப்படி எத்தனையோ விஜய் டிவி பிரபலங்கள் விவாகரத்து பெற்றவர்கள் தான். அந்த வகையில் சமீபத்தில் விவாகரத்தானவர் பொன்மகள் வந்தால் சீரியல் நடிகை மேக்னா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த சீரியல் ‘தெய்வம் தந்த வீடு’ தொடரும் ஒன்று. 2013 ஆம் ஆண்டு துவங்கிய 2017 வரை ஒளிபரப்பானது. ரசிகர்களின் ஆதரவால் இந்த தொடர் 992 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஓடியது.

-விளம்பரம்-
Ponmagal Vanthal Serial Story, Cast, Timings, Review, Photos and ...

இந்த சீரியலில் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சின்ன திரைக்கு அறிமுகமானவர் நடிகை மேக்னா வின்சென்ட்.’தெய்வம் தந்த வீடு’ சீரியலுக்கு பின்னர் தமிழில் பொன்மகள் வந்தால், அவளும் நானும் போன்ற தொடர்களில் நடித்துள்ளார்.அவளும் நானும் சீரியலுக்கு பின்னர் இவரை வேறு எந்த தமிழ் சீரியலிலும் காணமுடியவில்லை. மேலும், மலையாளத்திலும் இவர் எந்த சீரியலிலும் நடிக்கவில்லை நடிகை மேக்னா கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரில் மாதம் கேரளாவை சேர்ந்த தொழில் அதிபர் டான் டோனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இந்த நிலையில் நடிகை மேக்னா தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார். நடிகை மேக்னா, திருமணமான ஓராண்டிலேயே கணவரை பிரிந்து தனியாக தான் வசித்து வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகை மேக்னா நடித்த தெய்வம் தந்த வீடு சீரியலில் நடித்த விக்கு என்பவருக்கும் விரைவில் இரண்டாம் திருமணம் நடைபெற போகிறது என்ற ஒரு செய்தி கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

மேக்னாவின் விவாகரத்து குறித்து அவரின் நெருங்கிய சிலர் கூறியிருப்பது, மலையாள சீரியல்ல நடிச்சிட்டிருந்தப்ப அவருடன் நடிச்ச அவரோட தோழியின் அண்ணன்தான் டோனி. அதாவது, தோழியே நாத்தனாராக அமைஞ்சாங்க. மேக்னா நிச்சயதார்த்தமும் அந்த நாத்தனாரின் நிச்சயதார்த்தமும் ஒரே மேடையில் நடந்தன. ஆனால், திருமணம் ஆன மறு வருஷமே அவர்களுக்குள் பிரச்சனை என்று கூறியுள்ளனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் விவகாரத்திற்கான காரணத்தை கூறிய மேக்னாவின் கணவர், ஒரு வருஷம்தான் நாங்க சேர்ந்து இருந்தோம். பிறகு எங்களுக்குள்ள செட் ஆகலை. அதுதான் பிரிவுக்குக் காரணம். அதனால்தான் விவாகரத்துக்குப் போனோம். மேக்னா இப்ப சென்னையிலேயே செட்டிலாகிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். விவாகரத்து கிடைச்சு ரெண்டு மூணு மாசம் ஆகிடுச்சு என்று கூறியுள்ளார்.

Advertisement