ஆபாசமாக பேசிய பொன்னம்பலம்..! பிக் பாஸ் டபுள் மீனிங்.! உச்சகட்ட கோபத்தில் பெண் போட்டியாளர்கள் .?

0
1151
- Advertisement -

பொன்னம்பலம், தனது பெயருக்கு ஏற்ப ‘பொண்ணு’ங்களிடம் விவகாரமாக பேசி தொடர்ந்து ‘அம்பலப்’பட்டுக் கொள்கிறார். சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வரும் ஒருவர், அன்றைய தினமே மீண்டும் குற்றத்தில் ஈடுபடுவது போல, அத்தனை கலாட்டாக்கள் நிகழ்ந்த பிறகும் அன்றைய இரவே சர்ச்சையான வார்த்தையைச் சொல்லி பிரச்னையில் மாட்டிக்கொண்டார் பொன்னம்பலம்.

-விளம்பரம்-

ponambalam actor

- Advertisement -

22-ம் நாள் இரவு. ‘ஆட்களைத் தூக்கும்’ சவால் பற்றி வைஷ்ணவியும் சென்றாயனும் பொன்னம்பலத்தின் அருகில் பேசிக்கொண்டிருந்தார்கள். “ஓர் ஆண் நினைத்தால் வீரத்துடன், வீறாப்புடன் எத்தனை பளுவுள்ள பெண்ணையும் தூக்கி விடுவான்” என்ற சென்றாயன், ‘என்னண்ணே.. சொல்றீங்க.. கரெக்ட்டுதானே?” என்று பொன்னம்பலத்திடம் கேட்க, அவரோ.. “டே எஃபெக்ட்ல ஒண்ணும் தெரியாது. நைட் எஃபெக்ட்ல நான்தான் வின் பண்ணுவேன்” என்றார். சற்று அதிர்ச்சியடைந்த சென்றாயன் “நைட்டு… என்று இழுக்க, “டே எஃபெக்ட்ல தோத்துருவேன்.நைட் எஃபெக்ட்ல நான் தான் வின்னர்” என்றார் பொன்னம்பலம் மறுபடியும். (‘நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர்’ என்பது போல பொன்னம்பலத்தின் இந்த விவகாரமான வசனத்திற்கு சப்டைட்டில் எல்லாம் போட்டுக்காட்டினார் பிக் பாஸ்).

“நீங்க பேசறது தப்புண்ணே.. நான் சீரியஸா எடுத்துக்க மாட்டேன்றது வேற.. ஆனா நீங்க சொன்னது தப்பு.. கொழுப்புதானே உங்களுக்கு.. இப்படித்தான் முன்ன வாயைக் கொடுத்து மாட்டிக்கிட்டீங்க.!” என்றார் வைஷ்ணவி. ‘நான் தப்பா ஒண்ணும் சொல்லலையே… நான் கொச்சையால்லாம் பேச மாட்டேன்’ என்று மழுப்பினார் பொன்னம்பலம். சிலர் உற்சாகமான மனநிலையோடு நிகழ்த்தும் உரையாடல்களில் பாலியல் தொடர்பான கிண்டல்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைத்து பேசுவது பொதுவாக வழக்கம்.. பழக்கப்பட்ட சூழல்களி்ல் இது முரணாகவும் நெருடலாகவும் தெரியாது. எதிராளியும் அதே போன்றதொரு மலினமான கிண்டலை சொல்லி விட்டுச் சிரிப்பார்.

-விளம்பரம்-

Bigg-boss

இது போன்றதொரு பழக்கம் பொன்னம்பலத்திடமும் இருப்பது பெரிய குற்றம் இல்லைதான். ஆனால் புரிந்து கொள்ளப்பட்ட சூழல்களில், நபர்களிடம் மட்டுமே அதைப் பேச வேண்டும். அத்தனை அறிமுகமில்லாதவர்களிடம், குறிப்பாக பெண்களிடம் இப்படி பேச முடியாது; பேசக்கூடாது என்பது அடிப்படை. அதிலும் பிக்பாஸ் போன்ற கண்காணிப்பு சூழல்களில் தங்களின் வார்த்தைகள் குறித்த கவனம் இருக்க வேண்டும். அதிலும் பொன்னம்பலம் போன்ற வயதில் மூத்தவர்களுக்கு இது சார்ந்த பொறுப்பு அதிகம் இருக்க வேண்டும்.

கொச்சையான மொழியில் பேசுவது பெரிய பிழையில்லை என்றாலும் கூட தமிழ் கலாசாரம், பண்பாடு குறித்து தனக்கு அக்கறையிருப்பதாக காட்டிக் கொள்ளும் பொன்னம்பலம் அது குறித்து தானே முன்னுதாரணமாக இருக்க வேண்டாமா? பெரும்பாலான வசவு வார்த்தைகள் பெண்களின் கற்பு குறித்தும் உடல் உறுப்புகள் சார்ந்தும்தானே இருக்கின்றன? (இதையே கமலும் ஒருமுறை குறிப்பிட்டார்).

இப்படி வில்லங்கமாக பேசுவதை துவக்க நாளில் இருந்தே பின்பற்றுகிறார் பொன்னம்பலம். ‘அடுத்து வரப்போகும் போட்டியாளர், ஆணா.. பெண்ணா’ என்ற யூகம் நடந்து கொண்டிருக்கும் போது, ‘ரெண்டுங்கெட்டானா வந்துட்டா, என்ன பண்றது?’ என்றார். பெண்களிடம் தவறாக பேசியது குறித்து மும்தாஜ் விசாரிக்கும் போது ‘எங்க பசங்க தப்பு செஞ்சா கெட்ட வார்த்தைலதான் திட்டுவேன்.. கம்னு ஆயிடுவாங்க” என்றார். இதெல்லாம் மோசமான கலாசாரம் இல்லையா? பாலியல் தொடர்பான இரட்டை அர்த்த கிண்டல்களை செய்வதையே வழக்கமாக வைத்திருக்கும் நபர்களில் ஒருவராக பொன்னம்பலம் தென்படுகிறார். கூடவே தமிழ் பண்பாடு பற்றியும் கவலைப்படுவதாக பாவனை செய்வதுதான் நகைச்சுவை.

Bigg-boss-Ponambalam

இது தொடர்பான பஞ்சாயத்து இன்றைய நாள் முழுக்க வெடித்தது. “யார் கிட்டயும் சொல்லையே” என்று பிறகு சாதித்த வைஷ்ணவி, இந்த நிகழ்வைப் பற்றி முதலில் ஜனனியிடம் சொல்லிக் கொண்டிருந்தார். “பகல்ல தூக்க முடியாது.. நைட்ல தூக்கிடுவேன்”-னு பொன்னம்பலம் சொல்றாரு. அவர் வளர்ந்த விதம் அப்படி. வீட்லயும் கொச்சையாத்தான் பேசுவாராம்’ என்றெல்லாம் சொன்னார் வைஷ்ணவி.

“இது வரைக்கும் என் கிட்ட அவர் எதுவும் தப்பா பேசலை.. பொண்ணு மாதிரிதான் டிரீட் பண்றாரு” என்றார் ஜனனி. ‘விஷபாட்டில்’ சும்மா இருக்காமல், சென்றாயனிடம் இந்த விவகாரம் பற்றி தெரியாத மாதிரி பிறகு விசாரிக்க.. அவரும் நடந்ததைச் சொன்னார். பக்கத்தில் பாலாஜியும் நித்யாவும் அமர்ந்திருந்தார்கள். ‘பஞ்சாயத்து பாலிடால் குடிச்சிட்டானாம்’ கதையாக.. இந்தப் பஞ்சாயத்தும் அந்த வீட்டிற்குள் தீ போல மெல்லப் பரவியது.

ஒரு வம்பு, வெவ்வேறு வார்த்தைகளுடனும் வடிவங்களுடனும் மனிதர்களின் இடையே எப்படி வேகமாக பரவுகிறது என்பதற்கான உதாரணம் இது. பாலாஜி மற்றும் நித்யாவிடம் இந்த விஷயத்தைச் சொன்ன சென்றாயன், பிறகு ‘தான் சொல்லவில்லை’ என்று மறுத்தார். ‘நியாயமா பேசுடா.. தலையைவா எடுத்துருவாங்க’ எ்னறு பதிலுக்கு பாலாஜி கோபப்பட்டார்.

“நைட்ல தோத்துருவேன்-னுதான் சொன்னேன்..தூக்கிடுவேன்னு சொல்லலை… அதுவும் பொதுவாத்தான் சொன்னேன்.. இது கெட்ட வார்த்தை இல்லையே.. நீங்க..எல்லோரும் ஜாலியா விளையாடறீங்க.. ஏன் நான் சொல்றத மட்டும் பிரச்னையாக்கறீங்க…” என்று பொன்னம்பலம் ஆதங்கப்பட, “இந்த வீட்ல இனிமே டபுள் மீனிங்.. கெட்ட வார்த்தை இதெல்லாம் வேண்டாம்” என்றார் ரம்யா.. “ம்.. அப்படி நேரடியா சொல்லுங்க.. ஏத்துக்கறேன்” என்றார் பொன்னம்பலம்… (இதைத்தானே மத்தவங்களும் சொன்னாங்க.. முடியல..)

Advertisement