‘பொன்னி நதி’ பாடலில் வரும் ‘ஈ ஆரி எச மாரி’ என்ற கோரஸ் குரலுக்கு கூட இப்படி ஒரு அர்த்தம் இருக்கிறதா.

0
3499
ponni
- Advertisement -

பொன்னி நதி பாக்கணுமே என்ற பாடலுக்கு உண்மையான அர்த்தம் குறித்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் விமர்சனம்:

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் மாஸ் காட்டி இருக்கிறார்கள். நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதோடு தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று சொல்லலாம்.

படம் குறித்த தகவல்:

மேலும், தமிழ் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் உலக சினிமா ரசிகர்களும் பொன்னியின் செல்வன் படத்தை கொண்டாடி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பொன்னியின் செல்வன் படத்தை பார்த்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் பொன்னிநதி பார்க்கணுமே என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கிறது.

-விளம்பரம்-

பாடலின் அர்த்தம் தொடர்பான வீடியோ:

இந்நிலையில் இந்த பாடலின் உண்மையான அர்த்தம் குறித்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதாவது, ‘பொன்னி நதி பாக்கணுமே ஈஆரிஎசமாரி’ என்ற இந்த பாடலை ஏ ஆர் ரகுமான் பாடியிருந்தார். இந்த பாடல் வரிகளை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருந்தார். பாடலில் வரும் ஈஆரிஎசமாரி என்பது பாடலின் அழகுக்காக சேர்க்கப்பட்ட சொற்கள் என்று பலரும் நினைத்திருக்கிறார்கள்.

ஈ ஆரி எச மாரி அர்த்தம்:

ஆனால், இது அழகான தமிழ் சொற்கள். ஒவ்வொரு எழுத்துக்கும் அர்த்தம் இருக்கிறது. தமிழ் மொழியில் ஓர் எழுத்து சொற்கள் என்ற ஒன்று இருக்கிறது. உதாரணத்திற்கு ஐ-அழகு, கோ-அரசன், ஆ – பசு. இப்படி தமிழில் உள்ள ஓர் எழுத்து சொற்களுக்கும் அர்த்தம் இருக்கிறது. அந்த வகையில் ஈஆரிஎசமாரிக்கும் அர்த்தம் இருக்கிறது.

ஈஆரிஎசமாரி

ஈ – வில்,அம்பு,ஈட்டி
ஆரி-வீரன்
எச- இசை
மாரி – மழை
அதாவது, வில் வீரனின் இசைமழை என்று அர்த்தம். இந்த அழகான சொற்களைத்தான் சோழர்களின் பெருமையை சொல்லும் விதமாக இளங்கோ கிருஷ்ணன் பாடலில் கூறியிருக்கிறார்.

Advertisement