செயினை அடமானம் வைத்து அவர் ஓட்டிய குதிரையை எடுத்துவந்து இருக்கிறேன் – FDFSவில் மாஸ் காட்டிய கூல் சுரேஷ்.

0
405
coolsuresh
- Advertisement -

பொன்னியின் செல்வன் படத்திற்கு குதிரையில் வந்து அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார் கூல் சுரேஷ். தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருந்த பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படம் ஒன்று உலகம் முழுதும் வெளியாகி இருக்கிறது. பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக்க பலர் முயற்சித்து இருந்தார்கள்.அதை மணிரத்தினம் சாதித்து காட்டி இருக்கிறார்.இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார்.

-விளம்பரம்-
ponniyin

2500 பக்கங்கள் கொண்ட ஐந்து பாகங்கள் கொண்ட ஒரு நாவலை இரண்டு பாகமாக படம் எடுப்பது என்பது சவாலான ஒன்று. இதை தற்போது மணிரத்தினம் சாதித்து காட்டியிருக்கிறார். நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார். மணிரத்தினத்தை தவிர இதை யாராலும் செய்து காட்ட முடியாது என்ற அளவிற்கு கதை இருக்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரங்களிடையே இருக்கும் நட்பு, பகை, வஞ்சம், காதல் என எல்லா உணர்வுகளையும் சரியாக மணிரத்தினம் காண்பித்திருக்கிறார்.

- Advertisement -

70 ஆண்டு கால எதிர்பார்ப்பு :

நாவலில் இருந்து பல பகுதிகளை நீக்கியும் சுருக்கியும் தன்னுடைய பாணியில் கதையை நகர்த்திருக்கிறார் மணிரத்தினம்.70 ஆண்டு கால எதிர்பார்ப்பு இன்று நிறைவேறியிருக்கிறது. தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று சொல்லலாம். இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர் மட்டுமல்லாது பல பிரபலங்களும் தங்கள் விமர்சனங்களை கூறி வருகின்றனர்.

குதிரையில் வந்த கூல் சுரேஷ் :

அந்த வகையில் யூடுயூ ஸ்டார் என்று தனக்கு தானே பட்டம் கொடுத்துக்கொண்டு கூல் சுரேஷ்ஷும் இந்த படத்தை பார்க்க காலையிலேயே வந்துவிட்டார். அணைத்து பாடங்களுக்கும் வித்யாசமான முறையில் வந்து விமர்சனம் கொடுக்கும் கூல் சுரேஷ் இந்த முறை உண்மையான குதிரையில் வந்து அனைவரயும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருந்தார். இதுகுறித்து பேசிய அவர் ‘நான் ஓட்டி வந்த அந்த குதிரை பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம் சார் பயன்படுத்த குதிரை தான் அதைத்தான் நான் வாடகைக்கு வாங்கி வந்தேன்.

-விளம்பரம்-

21 பேரை செலவு செய்து அழைத்து வந்துள்ளேன் :

எனக்கு குறிப்பாக அந்த வெள்ளை குதிரை தான் வேண்டும் என்று சொல்லி அந்த குதிரைக்கு சொந்தக்காரர் யார் என்பதை கண்டுபிடித்து அந்த குதிரையை பிடித்துக் கொண்டு வந்தேன் அந்த குதிரை காண செலவு மற்றும் என்னுடன் 21 பேர் படம் பார்க்க வந்தார்கள் அனைத்து செலவையும் நானே ஏற்றுக் கொண்டேன் என்னுடைய செயினை அடமானம் வைத்து அந்த பணத்தில் தான் குதிரையை வாடகைக்கு எடுத்து என் நண்பர்களையும் அழைத்துக் கொண்டு பந்தாவாக மாஸாக வந்தேன்.

மணிரத்னம் அவர்களே சேரும் :

அதற்கு முக்கிய காரணம் இவ்வுலகில் அளவில் பேசப்படும் இந்த பொன்னியின் செல்வன் படம் எண்ணமும் பட்டி தொட்டி எங்கும் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் அந்த படத்திற்கு நாம் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே இன்று காலை 3 மணிக்கு எழுந்து தியேட்டருக்கு வந்திருக்கிறேன் இந்த பெருமை எல்லாம் மணிரத்தினம் அவர்களையே சேரும் என்று கூறி இருக்கிறார்.

Advertisement