புக் படிக்காதவங்களுக்கு இந்த ப்ரோமோ ஒரு ‘Goosebumps’ படிச்சவங்களுக்கு இது ஒரு Confusion – ஏன் தெரியுமா ?

0
159
ps
- Advertisement -

விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி மூன்று பேருமே ஒரே பிரேமில் வருவது எப்படி சாத்தியம்? என்று பொன்னியின் செல்வன் வாசகர்கள் கேட்டிருக்கும் கேள்வி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. பல எதிர்பார்ப்புடன் காத்து இருக்கும் பொன்னியின் செல்வன் படம் வெளியாக இன்னும் ஒரு நாளே இருக்கிறது. பல ஆண்டு கனவான பொன்னியின் செல்வன் படம் இயக்குனர் மணிரத்தினம் படைப்பில் உருவாகி இருக்கிறது. மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-
ponniyin

இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள்.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம்:

இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள். இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் படத்தை விளம்பரம் செய்யும் பணியில் படக்குழு ஈடுபட்டு வருகின்றனர். அதோடு தமிழ் சினிமாவில் இதுவரை காணாத அளவிற்கு பொன்னியின் செல்வன் படத்திற்கு டிக்கெட் புக் செய்யப்பட்டிருக்கிறது.

படம் குறித்த தகவல்:

தற்போது சோசியல் மீடியா முழுவதுமே பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி தான் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் ஒரே பிரேமில் மூவரும் வருவது எப்படி சாத்தியம்? என்று பொன்னியின் செல்வன் வாசகர்கள் எழுப்பியிருக்கும் கேள்வி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது, தற்போது சோசியல் மீடியாவில் ஆதித்ய கரிகாலன், அருள்மொழிவர்மன், வந்திய தேவன் மூவருமே ஒரு காட்சியில் வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

வாசகர்கள் எழுப்பிய கேள்வி:

இதை பார்த்த பொன்னியின் செல்வன் வாசகர்கள், இவர்கள் மூவருமே ஒரே காட்சியில் வருவது எப்படி சாத்தியம்? பொன்னியின் செல்வன் கதையில் மூவருமே சேர்ந்தது போல் ஒரு காட்சியில் கூட இல்லை. ஆதித்ய கரிகாலன் காஞ்சிபுரத்தை ஆண்டபோது அவருடைய தம்பி அருள்மொழி வர்மனும், தங்கை குந்தவியும் வேறு ஒரு இடத்தில் இருந்தார்கள். ஆதித்ய கரிகாலன் இறந்த பிறகு தான் அருள்மொழிவர்மன், குந்தவை வருகிறார்கள்.

வைரலாகும் புகைப்படம்:

அப்போது கூட வந்திய தேவன் அங்கு இல்லை. ஆரம்பத்தில் ஆதித்ய கரிகாலனுடன் வந்திய தேவன் இருக்கிறார். ஆனால், அருள்மொழி வரும் காட்சிகள் எதுவும் இல்லை. அதே போல் நந்தினி- அருள் மொழி வர்மன் வரும் காட்சிகளும் கதையில் இல்லை. இதெல்லாம் எப்படி சாத்தியம்? என்று பொன்னியின் செல்வன் வாசகர்கள் கேட்டிருக்கிறார்கள். தற்போது இந்த கேள்வி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும்,

Advertisement