தமிழில் 2008 ஆம் ஆண்டு வெளியான 'பூ' படத்தில் கதா நாயகி யாக நடித்து தமிழில் அறிமுகமானவர் நடிகை பார்வதி மேனன். தற்போது எங்கு இருக்கிறார் எப்படி இருக்கிறார் என்பதை கொஞ்சம் பார்த்துவிட்டு செல்லலாம்.
1988 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் பிரபல மலையாள தொலைகட்சியான கிரண் டிவியில் தொகுபாளினியாக இருந்து வந்தார். பின்னர் 2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அவுட் ஆப் சிலபஸ்' என்ற படத்தில் ஒரு துணை கதாபாத்திரத்தில் நடித்து சினிமா உலகில் அறிமுகமானார். பின்னர் ஒரு சில மலையாள படத்திலும் நடித்து வந்தார். மலையாள படங்கலில் சிறப்பாக நடித்ததர்காக பிலிம் பேர் விருதை கூட பெற்றுள்ளார்
இவர் தமிழில் நடித்த 'பூ' படத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். பின்னர் சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், மரியான், போன்ற பல படங்களில் நடித்து வந்தார். பின்னர் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் மலையாள சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கி விட்டார். தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.




