விமான நிலையத்தில் நடிகையிடம் தவறாக நடந்துகொண்ட நபர்..!

0
1177

தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த “காலா ” திரைப்படத்தில் வில்லன் நடிகராக நடித்த நானா படேகர் மீது இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா பாலியல் தொல்லை குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு படத்தின் படப்பிடிப்பின் போது நானா படேகர் தன்னிடம் அத்துமீறி நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா குற்றச்சாட்டை கூறி இருந்தார்.

pooja-bhatt

- Advertisement -

நடிகை தனுஸ்ரீ தத்தா கூறிய குற்றச்சாட்டை தொடர்ந்து சமூக வலைதளத்தில் #metoo என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி பல்வேறு நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான சீண்டல் அனுபவங்களை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியா டுடே நடத்திய விழா ஒன்றில் பிரபல நடிகை பூஜா பத், தமக்கு நேர்ந்த ஒரு மோசமான பாலியல் சீண்டல் அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த விழாவில் பேசிய அவர், நானா படேகரை நான் நல்லவர் என்று நினைத்திருந்தேன். நடிகை தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் மீது கூறிய குற்றச்சாட்டிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விளம்பரம்-

pooja

Pooja baat

எனக்கும் ஒரு குடிகார ஆண் நண்பரால் பாலியல் தொல்லை ஏற்பட்டுள்ளது. நமக்கு எதிரிகள் கூடவே இருக்கின்றனர். நாம் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், நான் எனது நண்பருடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன். அவர் என்னுடன் இருந்ததால் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். ஆனால், ஒரு முறை நான் அவருடன் விமான நிலையத்தில் இருந்த போது கொண்டிருக்கும்போது, நண்பர் திடீரென எனது மார்பகத்தைப் பிடித்து அழுத்தினார்.எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது அதிலிருந்து நான் எந்த ஆணுடனும் நெருக்கம் காட்டவில்லை என்று கூறியுள்ளார்.

Advertisement