தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘முகமூடி’ படம் மூலம் அறிமுகமாகி இருந்தார். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. அதற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இதனால் இவர் பாலிவுட் திரையுலகிற்கு ஜம் பண்ணி விட்டார்.

அதனை தொடர்ந்து இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் அல்லு அர்ஜுனாவுடன் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற படம் மெகா ஹிட்டானது. அதற்குப் பிறகு இவர் தமிழில் விஜய்யின் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் வரும் அரபிக்குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக கொண்டாடப்பட்டிருந்தது. அந்தப் படத்தின் பாடல், டான்ஸ் மூலமாகவே பூஜா பயங்கர பாப்புலர் ஆகிவிட்டார் என்று சொல்லலாம்.
பூஜா ஹெக்டே திரைப்பயணம்:
அதற்குப்பின் இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் என தென்னிந்தியா சினிமாவையே ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘ரெட்ரோ’ திரைப்படத்தில் பூஜா நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதை அடுத்து பாலிவுட்டில் வெளிவந்த தேவா படத்தில் பூஜா நடித்து இருந்தார். தற்போது இவர் தமிழில் தளபதி விஜய் அவர்களின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

பூஜா நடிக்கும் படங்கள்:
இப்படம் தளபதி விஜய் அவர்களின் கடைசி படம் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதை அடுத்து ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் கூலி படத்தில் மோனிகா என்ற பாடலுக்கு நடனம் ஆடி அசத்தி இருக்கிறார் பூஜா. இந்த பாடல் தான் தற்போது டாக் ஆப் டவுன் ஆக இருக்கிறது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே இந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதை அடுத்து பூஜா அவர்கள் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

பூஜா பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் பூஜா தன்னைப் பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் அவர், வளர்ந்து வரும் நடிகர்களை குறி வைத்து பணம் கொடுத்து அவர்களை பற்றி மோசமாக நடத்தும் செயல் அதிகரித்து கொண்டிருக்கின்றது. இது எனக்கு ரொம்பவே அதிர்ச்சி அளிக்கிறது. இது என் பெற்றோர்களையும் ரொம்பவே பார்த்து இருக்கிறது. ஆரம்பத்தில் இதைப் பற்றி நான் பெரிதாக கவலைப்படவில்லை. நாம் முயற்சிகளை மேற்கொண்டு இருக்கும் போது ஒருவர் நம்மை கீழே இழுக்க முயன்றால் நாம் அவர்களை விட மேலே இருக்கிறோம் என்பதுதான் பொருள்.
https://www.youtube.com/watch?v=p2sCDzErmvo
விமர்சனங்கள் பற்றி சொன்னது:
அதனால் முதலில் இதை ஒரு பாராட்டாகவே எடுத்துக்கொண்டேன். ஆனால், எல்லை மீறிய அர்த்தமற்ற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. பணம் கொடுத்து இந்த மாதிரி எல்லாம் செய்ய வைக்கிறார்கள்.
இதை நான் என்னுடைய குழுவின் மூலம் தான் அறிந்து கொண்டேன். இந்த செயலில் செயற்கை நுண்ணறிவு இயந்திரங்கள் தீவிரமாக செயல்படுகின்றது. சில மீம்ஸ் பேஜ்களும் பணம் கொடுத்தால் இந்த மாதிரியான பதிவுகளை எல்லாம் நீக்கி விடுவோம் என்றெல்லாம் சொல்கிறார்கள். சினிமாவில் இப்படியும் ஒரு இருட்டான முகமும் இருப்பது தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த மாதிரியான எதிர்மறை விமர்சனங்கள் அனைத்துமே ரசிகர்கள் நேரில் காட்டும் உண்மையான அன்பினால் காணாமல் போய்விடுகிறது. இந்த அன்பே உண்மையானது. இப்படி பணம் கொடுத்து ஒருவரை பற்றி மோசமாக விமர்சிப்பதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்.






