நயன் சம்பளத்தை மிஞ்சி அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக மாறிய நடிகை – யார் தெரியுமா ?

0
514
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் நம்பர் 1ஆக இருந்த நயன்தாராவை பின்னுக்கு தள்ளி இருக்கும் நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. ஹீரோக்களுக்கு நடுவில் போட்டிருப்பது போலவே தற்போது நடிகைகளுக்கு நடுவிலும் போட்டி நிலவி கொண்டு தான் இருக்கின்றது. அதிலும் அதிக சம்பளம் வாங்கும் நடிகை யார் என்று சர்ச்சை இருந்து கொண்டு தான் இருக்கின்றது. அந்த வகையில் தென்னிந்தியாவில் பல காலம் நயன்தாரா தான் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக முன்னிலையில் இருந்தார்.

-விளம்பரம்-

தற்போது அவரை பின்னுக்கு தள்ளி பூஜா ஹெக்டே முதலிடம் பிடித்திருக்கிறார். தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகையாக திகழ்பவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழ் சினிமாவில் 2012-ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியான ‘முகமூடி’ படம் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார். இந்த படத்தை பிரபல இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ஜீவா நடித்திருந்தார். ‘சூப்பர் ஹீரோ’ படம் என இப்படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை.

- Advertisement -

பூஜா ஹெக்டே திரைப்பயணம்:

அதற்கு பிறகு நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தமிழில் எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு வரவில்லை. இதனால் இவர் தெலுங்கு திரையுலகிற்கு ஜம் பண்ணி விட்டார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வருகிறார். அதிலும் இவர் அல்லு அர்ஜுனாவுடன் இணைந்து நடித்த ‘அல வைகுந்தபுரமுலோ’ என்ற படம் மெகா ஹிட்டானது. சமீபத்தில் இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார்.

பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே:

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. அதிலும் அரபிக்குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக கொண்டாடப்பட்டு இருந்தது. பாடல், டான்ஸ் மூலமாகவே பூஜா ஹெக்டே பயங்கர பாப்புலராகி விட்டார் என்று சொல்லலாம். ஆனால், பீஸ்ட் படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. இதற்கிடையில் பூஜா அவர்கள் பிரபாஸ் உடன் சேர்ந்து ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் சமீபத்தில் தான் வெளியாகி இருந்தது. இந்த படம் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளில் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

பூஜா ஹெக்டே நடித்த படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘ஆச்சார்யா’. இந்த படத்தை கொரட்டால சிவா இயக்கி இருந்தார். பின் தற்போது பூஜா ஹெக்டே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தென்னிந்திய சினிமா உலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பூஜா ஹெக்டே திகழ்கிறார் என்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பூஜா ஹெக்டே சம்பளம்:

தற்போது இவர் தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக பூஜா ஹெக்டே 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறாராம். அதாவது நயன்தாரா வழக்கமாக ஒரு படத்திற்கு 4 கோடி தான் சம்பளமாக வாங்கியிருக்கிறார். இந்த நிலையில் பூஜா ஹெக்டே, நயன்தாராவை ஓவர் டேக் செய்து சம்பளம் வாங்கி இருக்கிற தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement