இதனால் தான் தமிழ் சினிமாவில் வரல. ட்வீட் செய்த நடிகையை பங்கம் செய்யும் விஜய் ரசிகர்கள்.

0
20774
pooja-hedge
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடித்த எத்தனையோ நடிகைகள் பின்னர் தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போயிருக்கிறார்கள் ஐஸ்வர்யாராய் பிரியங்கா சோப்ரா என்று பல்வேறு நடிகைகள் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்கள் அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடித்து விட்டு தற்போது தெலுங்கில் கதா நாயகியாக திகழ்ந்து வருகிறார் நடிகை பூஜா ஹெட்ஜ்.

-விளம்பரம்-

தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெட்ஜ். மும்பை மாடல் அழகியான இவர், முகமூடி படத்திற்கு பின்னர் தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். அதிலும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த ஆலா வைகுந்தபுரம்ராம்லூ என்ற படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்த படத்தில் இடம்பெற்ற பொட்ட பொம்மா என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்த பாடலை டிக் டாக்கில் கூட பலரும் டிக் டாக் செய்து இருந்தனர். இந்த நிலையில் நடிகை பூஜா ஹெட்ஜ் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில், தமிழ் சினிமாவில் என்னைப் பார்க்க வேண்டும் என்று ரசிகர்களிடமிருந்து பல ட்வீட்களைப் படித்தேன். இந்த அன்பைக் காண நான் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுகிறேன்.. என்னை உற்சாகப்படுத்தும் ஒரு ஸ்கிரிப்டை செய்யவிரும்புகிறேன், அதனால் தான் தாமதம், இடைவெளி, ஆனால் நீங்கள் விரைவில் என்னை காணலாம் என்று பதிவிட்டிருந்தார்.

இந்த டீவீட்டை கண்ட விஜய் ரசிகர்கள், ஆமாம் இதுவரை தெலுங்கில் நீங்கள் செய்த படங்களை நாங்கள் பார்த்திருக்கிறோம் ரொம்ப உற்சாகமாக தானிருந்தது வர ரொமான்ஸ் பண்ற 2 பாட்டு ஆடவர் கேட்டான் உற்சாகமான ஸ்கிரிப்ட் என்ற உன்னை யாரும் கூப்பிடல அங்கேயே இரு என்று கமெண்ட் செய்துள்ளனர். மேலும்விஜய் 65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக இவர் நடிக்க போகிறார் என்று என்று சில வதந்திகள் கூட வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது

-விளம்பரம்-
Advertisement