லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிம்பு கடந்த சில வருடங்களாகவே உடல் எடை கூடி குண்டாக இருந்து வந்தார். இதனால் இவருக்கு படவாய்ப்புகளும் இல்லாமல்இருந்தது. ஆனால், நீண்ட இடைவெளிக்கு பின் இவருக்கு ‘செக்கச் சிவந்த வானம்’ திரைப்படம் ஒரு நல்ல கம் பேக் ஆக அமைந்தது.
ஆனால், அந்த படத்திற்கு பின்னர் வெளியான ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தைப் பெற்றது. அதோடு மட்டும் இல்லாமல் அந்த படத்தில் சிம்புவின் உடல் எடை மிகவும் விமர்சிக்கப்பட்டு வந்தது. அவரது ரசிகர்களே சிம்பு உடல் எடையை குறைத்து பழைய சிம்புவாக மாற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க : சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளாராம்.! அதுவும் சிம்பு படத்தில்.! அவரே சொன்ன தகவல்.!
தற்போது சிம்புவும் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்க லண்டன் சென்றிருந்தார் சிம்பு. கடந்த சில வாரங்களாக அங்கேயே தங்கி உடல் எடை குறைப்பிற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்த நிலையில் சிம்புவின் உடல் எடையை கிண்டல் செய்யும் வகையில் நடிகை பூனம் பாஜ்வா மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் கல்லூரியில் முதல் ஆண்டு பசங்க எப்படி இருப்பார்கள் என்று சிம்புவின் பழைய புகைப்படம் ஒன்றையும் அதன் பின்னர் எப்படி என்று சிம்பு குண்டாக இருக்கும் ஒரு புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். மேலும், மம்முட்டியின் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு லவ் யூ என்றும் பதிவிட்டுள்ளார்.