சிவகார்த்திகேயன் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளாராம்.! அதுவும் சிம்பு படத்தில்.! அவரே சொன்ன தகவல்.!

0
540
Simbhu-siva
- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர் சிவகார்த்திகேயன் வளர்ச்சி மிகவும் பாராட்டக் கூடிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. சாதாரண மேடை கலைஞராகவும், தொகுப்பாளராகவும் இருந்து வந்த சிவகார்த்திகேயன். தற்போது சினிமாவில் ஒரு நடிகராகவும் ,தயாரிப்பாளராகவும், பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

-விளம்பரம்-

ஆரம்ப காலகட்டத்தில் சினிமாவில் ஒரு காமெடியனாக வலம் வர வேண்டும் என்ற ஆசையில் இருந்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். அதேபோல சினிமாவில் நடிப்பதற்கு முன்பாக இவர், நெல்சனிடம் ஒரு உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் என்று நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கூறியுள்ளார்.

இதையும் படியுங்க : லண்டனில் உடல் எடை குறைப்பு சிகிச்சை.! சிம்பு வெளியிட்ட சமீபத்திய புகைப்படம்.! 

- Advertisement -

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. சமீபத்தில் இந்த படத்திற்காக இயக்குனர் நெல்சனுக்கு சிறந்த பொழுதுபோக்கு இயக்குனர் என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதினை நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு வழங்கினார். அப்போது பேசிய சிவகார்த்திகேயன் நெல்சனிடம் நான் ‘வேட்டை மன்னன்’ என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளேன் என்று கூறினார்.

Image result for vettai mannan

மேலும், தனது நண்பரான அருண் ராஜா காமராஜ் கூட நிகழ்ச்சி இடம் உதவியாளராக பணிபுரிந்தவர் தானம் அதனால்தான் அருண் ராஜா காமராஜ் இயக்கிய ‘கனா’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு, நெல்சன் என்ற பெயரை வைத்தார்களாம். நெல்சன், சிவகார்த்திகேயனுக்கு பத்து வருடங்களாக தெரியுமாம் அதனால் தான் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண வயசு’ பாடலைக் கூட சிவகார்த்திகேயன் நெல்சனுக்காக எழுதிக் கொடுத்தார் என்பதும் அந்த விழாவில் தெரியவந்தது.

-விளம்பரம்-
Advertisement