பூனம் கவுர் 1986ஆம் ஆண்டு ஹைதராபாத் நகரில் பிறந்தவர். இவருடைய அப்பா பெயர் பீப் சிங் மற்றும் அம்மாவின் பெயர் பஹ்ரெயின் கவுர். இவர் ஹைதராபாத் நகரில் உள்ள பப்ளிக் ஸ்கூலில் படித்தார். பள்ளிப்படிப்பை முடித்து அங்குள்ள தேசிய தொழிநுட்ப கல்லூரியில் பேஷன் டிசைனிங் படித்துள்ளார்.
கல்லூரியில் படிக்கும் போதே இவருக்கு பட வாய்ப்புகள் வந்துள்ளது. தனது 20 வயதில் 2006ஆம் ஆண்டு மாயாஜாலம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். 2007ஆம் ஆண்டு தமிழில் நெஞ்சிருக்கும் வரை என்ற படத்தில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் உன்னைப்போல் ஒருவன், பயணம், வெடி, என் வழி தனி வழி, அச்சாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தார். ஆனால், தமிழில் இவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை.
இதையும் படியுங்க : முதன் முறையாக தனது இரண்டு பிள்ளைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட சரண்யா மோகன்.!
இவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் மிகப்பெரிய ரசிகை ஆவார். பவன் கல்யான் அரசியலில் குதிக்கப் போவதை மகேஷ் கத்தி என்னும் விமர்சகர் கடுமையாக விமர்சனம் செய்தார். இதனை பிடிக்காத பூனம், விபச்சாரம் செய்து சம்பாதிப்பதை விட, மற்றவரை விமர்சனம் செய்து சம்பாதிப்பது மிக கேவலமானது எனக் கூறினார்.
இந்த நிலையில் இது குறித்து பேட்டி கொடுத்துள்ள பூனம் கவுர், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே என்னைப் பற்றி தவறான செய்திகளை பல ஊடகங்கள் தெரிவித்து வருகிறது. இதனால் நான் மிகவும் மனம் நொந்துபோய் உள்ளேன். எனவே, என்னை பற்றி தவறான செய்திகளை பரப்பி 50க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் மீது நான் புகார் அளித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.