சமூக வளைத்தளத்தில் ஆபாச விடியோக்கள் புகைப்படங்கள் என்று பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பூனம் பாண்டே. இதுவரை இந்தியில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தலும் இணையத்தளத்தில் அம்மணி படு பேமஸ். இறுதியாக இந்தியில் ஜர்னி ஆப் கர்மா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத அடிக்கடி தன்னுடைய காதலுடன் மோசமாக பதவியை வெளியிட்டுவந்தார்.

2011-ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று இவர் கூறி இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே போல தன்னுடைய காதலுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வளையதளத்தில் வெளியிட்டு வைரலானது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இவர் ஆபாச புகைப்படங்களை தனது பூனம் பாண்டே ஆப் மூலம் விற்றும் வந்தார்.
இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் இருந்த பூனம் பாண்டே கடந்த 2020 ஆம் ஆண்டு ரகசியமாக தனது நீண்ட நாள் காதலரான சாம் என்பவரைதிருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பூனம் பாண்டே உன்னுடன் ஏழேழு ஜென்மம் வாழ காத்துக்கொண்டு இருக்கிறேன்'' என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்து ஹனிமூன் சென்ற போதே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.
View this post on Instagram
அதன் பின்னர் மீண்டும் இருவரும் சமாதானம் ஆகி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தன் கணவர் தன்னை கொடுமையாக தாக்கியதாக பூனம் பாண்டே அளித்த புகாரின் பெயரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார். இப்படி ஒரு நிலையில் இவர் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் லாக்கப் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும் அவரிடம் அடிவாங்கினேன்.
யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார். ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். இதனால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்’’ என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் பூனம் பாண்டே பூனம் பாண்டேவிற்கு cervical cancer எனப்படும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்பட்டு இறந்துவிட்டதாக அவரது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடப்பட்டு இருந்தது.
View this post on InstagramA post shared by HAUTERRFLY | A Fork Media Group Co. (@hauterrfly)
தான் இன்னும் சாகவில்லை என்றும், உயிரோடுதான் இருக்கிறேன் என்றும் கூறி, பூனம் பாண்டே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.கர்ப்பப்பை புற்று நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இது போன்ற ஒரு செய்தி பரவ விடப்பட்டது. கர்ப்பபை புற்று நோய் காரணமாக ஆயிரக்கணக்கான பெண்கள் உயிரிழக்கின்றனர். இதற்கு என்ன செய்யவேண்டும் என்று அவர்களுக்கு தெரியவில்லை. இந்நோயை தடுக்க முடியும். அதனால் இந்த நோய் தொடர்பான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து கொள்ளுங்கள்." என்று அதில் பேசியுள்ளார்.






