பாலிவுட்டில் அனைவரும் எதிர்பார்த்திருந்த லாக் அப் நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான விளம்பரங்கள் எல்லாம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தன. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்தது. நடிகை கங்கனா ரனாவத் முதல் முறையாக லாக் அப் ரியாலிட்டி ஷோவை நடித்த வருகிறார். மேலும், இந்த நிகழ்ச்சியை தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தயாரித்து வருகிறார். இந்த நிகழ்ச்சி தொடங்க ஆரம்பத்தில் பல பிரச்சனைகள் எழுந்தது. பின் எல்லாவற்றையும் கடந்து இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பூனம் பாண்டேவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து உள்ளார்.
சமூக வளைத்தளத்தில் ஆபாச விடியோக்கள் புகைப்படங்கள் என்று பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பூனம் பாண்டே. இதுவரை இவர் இந்தியில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தலும் இந்தியில் அம்மணி படு பேமஸ். இறுதியாக இவர் ஜர்னி ஆப் கர்மா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அடிக்கடி தன்னுடைய காதலுடன் மோசமாக பதவியை வெளியிட்டுவந்தார். எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு இருந்தார்.
பூனம் பாண்டே பற்றிய விவரம்:
2011-ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று இவர் கூறி இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே போல தன்னுடைய காதலுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வளையதளத்தில் வெளியிட்டு வைரலானது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இவர் ஆபாச புகைப்படங்களை தனது பூனம் பாண்டே ஆப் மூலம் விற்றும் வருகிறார். இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் இருந்த பூனம் பாண்டே கடந்த ஆண்டு ரகசியமாக தனது நீண்ட நாள் காதலரான சாம் என்பவரைதிருமணம் செய்து கொண்டார்.
லாக் அப் நிகழ்ச்சியில் பூனம் பாண்டே:
ஆனால், திருமணத்திற்கு பின் பூனம் பாண்டே தன்னுடைய கணவன் கொடுமைப்படுத்துகிறார் என்று போலீசில் பரபரப்பு புகார் அளித்தார். இப்படி இவர் மீண்டும் சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் கங்கனா ரனாவத் ஹோஸ்ட் செய்யும் லாக்கப் நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டுள்ளார். வித்தியாசமான முறையில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டு இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் எல்லோருமே சர்ச்சை பின்னணி கொண்டவர்கள். இந்த நிலையில் நிகழ்ச்சியில் பூனம் பாண்டே பிற போட்டியாளர்களான அஞ்சலி அரோரா மற்றும் தேசீன் பூனவலா உடன் தனது வீடியோக்கள் ட்ரோல் பற்றி பகிர்ந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பூனம் பாண்டே கூறியது:
அதில் அவர், ஒரு மாதத்தில் 60 மில்லியன் இம்ப்ரசன்கள், 200 மில்லியன் பார்வைகள். யார் தான் இந்த ரகசியமாக பின்தொடர்பவர்கள். இரவுகளில் இவர்கள் என் வீடியோக்களை பார்க்கிறார்கள். பகலில் எழுந்ததும் எனக்கு எதிராக ட்ரோல் செய்யவும், கமெண்ட் செய்யவும் ஆரம்பித்து விடுகிறார்கள். யார் வெட்கம் இல்லாதவர்கள் என எனக்கு தெரிந்தாக வேண்டும் .நானா? அவர்களா? மேலும், சிறிய ஆடைகள் அணிவது, என்னுடைய உடலை காட்டுவது. இதனால் என்னை வெட்கம் இல்லாதவர் என நீங்கள் சொன்னால் நான் ஏற்றுக் கொள்ளப்போவதில்லை. . மற்றவர்களைச் சீண்டுபவர்கள், மோசமாக உணரச் செய்பவர்களே என்னைப் பொறுத்தவரை வெட்கம் இல்லாதவர்கள் என்று தெரிவித்திருந்தார்.
பூனம் பாண்டே கணவர் அளித்த பேட்டி:
அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சியில் பூனம் பாண்டே தன்னுடைய பர்சனல் ஆன விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார். அதில் அவரின் முன்னாள் கணவரான ஷாம் பாம்பே காலையில் ஆரம்பித்து இரவு வரை குடித்துவிட்டு தன்னை தாக்கியதாக சொல்லியிருந்தார். இதை பார்த்த ஷாம் பாம்பே கூறியது, பூனமிடம் விசுவாசம், நம்பிக்கையும், நேர்மையும் தவிர எல்லா பண்புகளுமே இருக்கிறது. அது ஒரு தோல்வியானது. அதற்கு பதிலளித்த சம்பவம் இடம் எல்லாமே இருக்கிறது. அவர் உருவாகியிருக்கிற பிம்பத்தினால் யாருமே அவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என என்னிடம் அவர் சொன்னதால் தான் நான் திருமணம் செய்துக்கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் என்னைப் பற்றி பேச வேண்டிய காரணம் என்ன? நாங்கள் இருவரும் உண்மையாக காதலித்தோம்” என்று கூறியிருக்கிறார்.