தன் கணவர் தன்னை நாயை அடிப்பது போல அடித்தார் என்று பூனம் பாண்டே பேசி இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வளைத்தளத்தில் ஆபாச விடியோக்கள் புகைப்படங்கள் என்று பதிவிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பூனம் பாண்டே. இதுவரை இந்தியில் மூன்று படங்கள் மட்டுமே நடித்திருந்தலும் இணையத்தளத்தில் அம்மணி படு பேமஸ். இறுதியாக இந்தியில் ஜர்னி ஆப் கர்மா என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத அடிக்கடி தன்னுடைய காதலுடன் மோசமாக பதவியை வெளியிட்டுவந்தார்.
2011-ஆம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் என்று இவர் கூறி இருந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதே போல தன்னுடைய காதலுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூக வளையதளத்தில் வெளியிட்டு வைரலானது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், இவர் ஆபாச புகைப்படங்களை தனது பூனம் பாண்டே ஆப் மூலம் விற்றும் வருகிறார்.
இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் இருந்த பூனம் பாண்டே கடந்த ஆண்டு ரகசியமாக தனது நீண்ட நாள் காதலரான சாம் என்பவரைதிருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு தனது கணவருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பூனம் பாண்டே உன்னுடன் ஏழேழு ஜென்மம் வாழ காத்துக்கொண்டு இருக்கிறேன்” என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் திருமணம் முடிந்து ஹனிமூன் சென்ற போதே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம் பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்தார்.
திடீர் திருமணம் :
அதன் பின்னர் மீண்டும் இருவரும் சமாதானம் ஆகி ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இந்த நிலையில் தன் கணவர் தன்னை கொடுமையாக தாக்கியதாக பூனம் பாண்டே அளித்த புகாரின் பெயரில் அவரது கணவர் கைது செய்யப்பட்டார். ஆனால், இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் பூனம் பாண்டே தான் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கெஞ்சினார் அதான் அவரை திருமணம் செய்தேன் என்று கூறி இருந்தார்.
கணவர் மீது குற்றம் சாட்டிய பூனம் :
இப்படி ஒரு நிலையில் இவர் இந்தியில் ஒளிபரப்பாகி வரும் லாக்கப் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் சாம் பாம்பேவுடன் 4 வருடங்கள் தொடர்பில் இருந்தேன். அந்த 4 வருடங்களும் சரியாக தூங்கவில்லை. சாப்பிடவில்லை. தினமும் அவரிடம் அடிவாங்கினேன். யாருக்கும் போன் செய்யக்கூடாது என்று செல்போனை உடைத்தார். நாயை அடிப்பது போன்று என்னை அடித்தார். ஒரு அறைக்குள் வைத்து பூட்டினார். இதனால் பல முறை தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தேன்’’ என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
பூனம் பாண்டே கணவர் அளித்த பேட்டி:
இதை பார்த்த ஷாம் பாம்பே கூறியது, பூனமிடம் விசுவாசம், நம்பிக்கையும், நேர்மையும் தவிர எல்லா பண்புகளுமே இருக்கிறது. அது ஒரு தோல்வியானது. அதற்கு பதிலளித்த சம்பவம் இடம் எல்லாமே இருக்கிறது. அவர் உருவாகியிருக்கிற பிம்பத்தினால் யாருமே அவரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என என்னிடம் அவர் சொன்னதால் தான் நான் திருமணம் செய்துக்கொண்டேன். இந்த நிகழ்ச்சியில் என்னைப் பற்றி பேச வேண்டிய காரணம் என்ன? நாங்கள் இருவரும் உண்மையாக காதலித்தோம்” என்று கூறியிருக்கிறார்.