ஒரே ஒரு மீம் யூடுயூபில் 13 மில்லியனில் இருந்து 24 மில்லியன் வியூஸ். ஏன் தெரியுமா ? இத பாருங்க.

0
15551
ajith
- Advertisement -

சமூக வலைதளத்தில் காரணமே இல்லாமல் பல்வேறு ஹேஷ் டேக் கள் மற்றும் மீம்கள் வைரலாக பரவி இறக்கிறது. சமீபத்தில் கூட சமுத்திரக்கனியை வைத்து பல்வேறு மீம்கள் வெளியானது. ஆனால், தொடீரென்று சமுத்ரகனியை கலாய்க்க என்ன காரணம் என்று பலரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். இப்படி ஒரு நிலையில் அஜித், பார்த்திபன், தேவையானி நடிப்பில் வெளியான ”நீ வருவாயென” படத்தில் வரும் தேவையானியின் மீம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

அதிலும், இந்த படத்தில் இடம் பெற்ற ‘பூங்குயில் பாட்டு’ என்ற பாடல் தற்போது யூடுடியூபில் வியூஸ்களை குவித்து வருகிறது. கடந்த  5 வருடங்களாக 13 மில்லியன் பார்வையாளர்களுடன் இருந்த பாடல் வெறும் இரண்டே நாளில் சுமார் 24மில்லியன் பார்வையாளர்களை பெற்றது.இரண்டு நாளில் 11 மில்லியன் பார்வை எனது சாதனை தான். இந்த பாடலுக்கு ஏன் திடீரென இத்தனை பார்வையாளர்கள் என்று பலரும் குழம்பி போனார்கள்.

- Advertisement -

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட #Pray_for_Neasamani ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்தது. பாகிஸ்தானில் இருந்து இயங்கும் `Civil Engineering Learners’ என்ற முகநூல் பக்கத்தில் சுத்தியலின் படம் ஒன்றை போட்டு, இதனை உங்கள் ஊரில் என்னவென்று அழைப்பார்கள் என கேட்க, விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலையை இந்த சுத்தியல்தான் பதம் பார்த்தது என கோக்குமாக்காக கமெண்ட் இட, Pray_for_Neasamani ஹேஷ்டேக் உருவானது.

ஆனால், 1999 ஆம் ஆண்டு வெளியான ”நீ வருவாயென” படத்தில் இடம்பெற்ற இந்த [பாடல் ஏன் ட்ரெண்டிங்கில் வந்தது. எப்படி இந்த பாடல் திடீரென்று யூடுயூப்பில் இத்தனை வியூஸ்களை குவித்தது என்று ஆராய்கையில், சமீபத்தில் இந்த பாடலின் முதல் வரியை வைத்து ஒரு மோசமான கெட்ட வார்த்தையையும் சேர்த்து மீம் ஒன்று வைரலானது. அதன் பின்னர் தான் இந்த பாடலுக்கு இப்படி ஒரு மவுஸ் மீண்டும் கூடியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement