‘ஒரு சீனில் நிர்வாணமாக நடிக்க என்னிடம் அணுகி இருந்தாங்க’ உண்மையை உடைத்த பூர்ணா – பின்னணி இது தான்

0
693
poorna
- Advertisement -

நிர்வாணமாக நடிக்க சொல்லி தன்னிடம் அணுகியதை குறித்து பூர்ணா அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்தியா சினிமாவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருபவர் பூர்ணா. இவர் கேரளாவை சேர்ந்தவர். இவரது இயற்பெயர் ஷாம்னா காசிம். இவரை பலரும் குட்டி அசின் என்று தான் அழைத்தனர். இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். ஆனால், அதற்கு முன் இவர் மலையாளத்தில் 2004 ஆம் ஆண்டு வெளியான ‘மஞ்சு போலொரு பெண்குட்டி’ என்ற படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-
உடல் மெலிந்து அடையாளம் தெரியாமல் மாறிய பூர்ணா..! நீங்களே பாருங்க.!  புகைப்படம் இதோ.! - Tamil Behind Talkies

அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவருக்கு மலையாளத்தில் நிறைய பட வந்து இருந்தது. அதற்கு பிறகு இவர் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், தகராறு, மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் பூர்ணா தவித்து கொண்டு இருந்தார். மேலும், இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு அமையவில்லை. இடையில் இவர் ஒரு சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று இருந்தார்.

- Advertisement -

விசித்திரன் படத்தில் பூர்ணா:

தற்போது மீண்டும் இவர் தமிழ் தவிர தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் பூர்ணா நடிப்பில் வெளியாகியிருந்த விசித்திரன் படம் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஜோசப் என்கிற படத்தின் தமிழ் ரீமேக். இயக்குனர் பத்மகுமார் தான் தமிழில் விசித்திரன் படத்தை இயக்கியிருக்கிறார். பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கவர்ச்சி போட்டோவை இணையத்தில் வெளியிட்ட நடிகை பூர்ணா! புகைப்படம் உள்ளே! -  TamilSpark

பூர்ணா நடிக்கும் படங்கள்:

இவர்களுடன் இதில் பூர்ணா, மதுஷாலினி நடித்து இருக்கின்றனர். ஜிவி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இயக்குநர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் இத்திரைப்படத்தைத் தயாரித்திருக்கிறது. மேலும், இந்த படத்தில் நடிகர் ஆர்கே சுரேஷ்க்கு ஜோடியாக பூர்ணா நடித்திருந்தார். இருவரின் நடிப்பும் பாராட்டுகளை பெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 என்ற படத்திலும் பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதுமட்டுமில்லாமல் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் பூர்ணா.

-விளம்பரம்-

பிசாசு 2 குறித்து பூர்ணா சொன்னது:

இந்த நிலையில் சமீபத்தில் பூர்ணா பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவரிடம் பிசாசு 2 படத்தில் ஆண்ட்ரியா 20 நிமிடக் காட்சியில் நிர்வாணமாக நடித்தது பற்றி கேள்வி எழுப்பி இருந்தார்கள். இதற்கு பதிலளிக்க மறுத்துவிட்ட பூர்ணா படம் ரிலீஸ் ஆகும்போது உங்களுக்கு தெரியும் என்று கூறியிருந்தார். இதனையடுத்து பூர்ணாவிடம் இதுபோன்ற நிர்வாண காட்சியில் நடிக்க சொல்லி உங்களை யாராவது அணுகியது உண்டா? என்று கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு பூர்ணா கூறியிருந்தது, ஆம், பெரிய ஓடிடி தளத்திலிருந்து எனக்கு ஒரு நல்ல வாய்ப்பு வந்து இருந்தது.

நிர்வாண காட்சியில் நடிக்க மறுத்த பூர்ணா:

அந்தத் தொடரின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், அதில் ஒரு முக்கியமான காட்சி ஒன்றில் நிர்வாணமாக நடிக்க வேண்டி இருந்தது. அதனால் அந்த தொடரில் நடிக்க மறுத்துவிட்டேன். மிகவும் வருத்தத்தோடு தான் அந்த வாய்ப்பை வேண்டாம் என்று கூறினேன். ஏனெனில், அந்த கதை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அந்த காட்சி அதை தொடரில் மிகவும் முக்கியமானது. அதனால் தான் என்னால் நடிக்க முடியாது மன்னித்து விடுங்கள் என்று இயக்குனரிடம் கூறி விட்டேன் என்று நடிகை பூர்ணா தெரிவித்திருந்தார்.

Advertisement